மறக்கப்பட்ட மலைப்பிரசங்கம் THE FORGOTTEN BEATITUDE செவ்வாய்க்கிழமை மாலை, ஏப்ரல் 25, 1961 ஸ்டீபன் மாதர் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா 1. எங்களுடைய ஜீவனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுவுக்காக, எங்களுடைய இருதயத்தின் ஆழத்திலி ருந்து உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவரிடத்தில் ஒரு குற்றமும் நாங்கள் காணவில்லை. ஆனால் நாங்கள் அவருடைய ஜீவியத்தை நோக்கி, அதை ஆராய்ந்து பார்க்கும் போது, எங்களிடத்தில் குற்றம் இருப்பதை நாங்கள் காண்கிறோம், நாங்கள் அவருடைய ஜீவியத்தைக் கொண்டு எங்களுடைய ஜீவியத்தை (ஒப்பிட்டுப் பார்க்கும் போது), அவ்வாறு எங்க ளிடத்தில் குற்றம் இருப்பதை நாங்கள் காண்கிறோம். நீர் எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு நீர் எங்களை சந்திக்க வேண்டுமென்று நாங் கள் வேண்டிக் கொள்கிறோம். இரண்டு பேராவது அல்லது அதற்கு அதிகமான பேராவது எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவில் நீர் இருப்பீர் என்று வாக்குப் பண்ணியுள்ளீர். நாங்கள் எதைக் கேட்டாலும், அது அருளப் படும். பிதாவே, கிறிஸ்துவை மகிமையடைந்தவராக காண வேண்டும் என்பதே எங்கள் - எங்களுடைய நோக்கமாகவும், இன்றிரவு எங்களுடைய குறிக்கோளாகவும், எங்களுடைய இருதயத்தின் ஏக்கமாகவும் உள்ளது. எனவே அவர்கள் தொடர்ந்து செல்கையில், மரிக்காமல் என்றென்றுமாய் ஜீவ னோடிருக்கிற ஒரு ஜீவனுள்ள தேவனிடத்திலுள்ள ஒரு ஜீவனுள்ள விசுவாசத்திற்கு ஜனங்களைக் கொண்டு வருவதே இன்றிரவு எங்களுடைய பிரயாசமாக இருக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, இன்றிரவு நீர் இயேசு கிறிஸ்து வழியாக உமது பிரசன்னத்தைக் கொண்டு எங்கள் ஆத்துமாக்களை கிளர்ச்சி யூட்ட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், நாங்கள் அவருடைய நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 2. சற்று தாமதமாகி விட்டது, நான் கொஞ்சம் களைப்பா யிருக்கிறேன்... கிறிஸ்துமஸ் தொடங்கி நான் நிறுத்தவே செய்யாமல் போய்க் கொண்டேயிருக்கிறேன். எனவே எனக்கு மிகவும் களைப்பாயுள்ளது. இன்றிரவு சகோதரன் ஜோசப் போஸ் அவர்களைக் கண்ட போது, நான் சந்தோஷப்பட் டேன், அவர் ஊழியக்களங்களை விட்டு, கடலைக் கடந்து திரும்பி வந்து கொண்டிருக்கையில், நான் சிறிது காலமாகவே அவரைக் காண எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். இங்கேயிருக்கும் நம்முடைய விலையேறப்பெற்ற சகோ தரனும் நண்பருமாகிய சகோதரன் டாமி ஹிக்ஸ் அவர்கள் கனடாவில் ஒரு கூட்டத்தை நடத்துவதற்காக இன்றிரவோ, நாளை காலையோ நம்மை விட்டுப் போகிறார் என்று கூற நான் இன்றிரவு வருந்துகிறேன். அவர் இன்றிரவு வெளியே வந்து, எனக்காக பிரசங்கம் பண்ணும்படி அவரை அழைத்து வர முயற்சித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் நான் மிகவும் களைப்பாயிருந்தேன், அல்லது ஜெப வரிசையும் எனக்கிருக்கிறது. அவர் - அவரோ என்னிடமே இதை திரும்பக் கொடுத்து விட்டார், எனவே.... அவர், அடுத்த முறை, அடுத்த முறை...” என்று கூறி விட்டார். அவர் தொடர்ந்து என்னிடம் அவ்வாறு கூறிக் கொண்டேயிருக்கிறார். 3. எனக்கு - எனக்குத் தெரியும், சகோதரன் டாமி ஹிக்ஸ் அவர்கள்... நான் கொண்டிருக்கிறேன்... நான் அவருடன் இருந்த அந்த நாட்களும், நேரங்களும், அந்த ஐக்கியமும், நான் நிச்சயமாகவே டாமி ஹிக்ஸ் அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஊழியக்காரராய் இருக்கிறார் என்று அவர் மேல் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சகோதரன் ஹிக்ஸ் அவர்களுக்கு இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு விரோதமாக யாராவது எதையாகிலும் கூற முடியும் என்று நான் நம்புவதில்லை , அவர் ஒரு மகத்தான உன்னத படைப்பாக இருக்கிறார். அவர் அப்படியே ஒரு... ஒரு நாள் அவர்... அவருடைய செய்தி அர்ஜென்டினாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டி ருக்கிறீர்கள். அங்கு போவதற்கான பணம் கூட அவரிடம் கிடையாது, ஆனால் கர்த்தர் அவரை அனுப்பினார், ஓ, அந்தக் கூட்டத்தைக் குறித்து உங்களுக்குத் தெரியும். அவ்விதமாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்கக் கூடிய ஒரு நபர்... நீங்கள் உங்களிடத்திலுள்ள எந்த பாகத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதை மாத்திரமே தேவனால் உபயோகிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் பாருங்கள், நான் கூறினபடி, அதை நான் நம்புகிறேன், ஒரு நாள், ஏதோவொரு இடத்தில்..... நான் வித்தியாசமான இடங் களில், காலை நேர கூட்டங்களிலும், பிற்பகல் கூட்டங் களிலும், இன்னும் என்னவாக இருந்தாலும், அதிலே தான் அதிகம் பேசுகிறேன்...... 4. ஆனால் நான் இதைச் சொன்னேன், நீங்கள் ஒப்புக்கொடுப்பதையே தேவனால் உபயோகிக்க முடியும். சிம்சோனைப் போல, சிம்சோன் தன்னுடைய இருதயத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. அவன் அதைத் தெலீலாளுக்குக் கொடுத்து விட்டான். ஆனால் அவன் தன்னுடைய பலத்தைத் தான் தேவனுக்குக் கொடுத்தான், அவனுடைய பலத்தை மாத்திரமே தேவனால் உபயோகிக்க முடிந்தது. அவ்வளவு தான். ஆனால் ஒரு மனிதனால் தனக்குள்ள எல்லாவற்றையும் தேவனுக்கு ஒப்புவிக்க மட்டும் முடியுமானால், இப்பொழுது தேவையானது எல்லாம் அவ்வளவு தான். நீங்கள் உங்கள் - உங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுக்க முடியுமானால், தேவன் உங்கள் சரீரத்தை உபயோகிப்பார். நீங்கள் உங்கள் சிந்தை யையோ, உங்கள் இருதயத்தையோ, அது என்னவாக இருந்தா லும் அதை ஒப்புக்கொடுக்க முடியுமானால், உபயோகிக்கும் படி நீங்கள் தேவனுக்குக் கொடுப்பதை அவர் உபயோ கிப்பார். அவ்விதமாக ஒப்புக்கொடுக்கும்படியாகக் காணக் கூடிய யாரோ ஒருவரை கண்டுபிடிக்கும்படியாக அவர் தேடிக் கொண்டிருக்கிறார். சகோதரன் டாமி, தேவன் உங்களோடு இருப்பாராக. அவர் உமக்கு மகத்தான பெரிய வெற்றியை தருவாராக. அங்கே நடக்கும் உம்முடைய ஆராதனைகளில் நாங்கள் உமக்காக ஜெபிப்போம். நானும் கூட ஒரு சில தினங்களில் கனடாவில் இருப்பேன், ஆனால் மேலேயிருக்கும் மறுமுனை யில், எனவே..... அவர் உமக்குப் பெரிய வெற்றியையும், பாதுகாப்பான பிரயாணத்தையும் அருளுவாராக. [சகோதரன் டாமி ஹிக்ஸ், "தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்று கூறுகிறார் - ஆசிரியர்.) உமக்கு நன்றி. தேவன் உம்மையும் ஆசீர்வதிப்பாராக, சகோதரன் டாமி. 5. இந்தக் காலையில் தேவனுடைய பந்தியைச் சுற்றிலும் இருந்த ஐக்கியத்தில், நமக்கு ஒரு மகத்தான நேரம் உண் டாயிருந்தது - அங்கே நாம் ஆசீர்வாதத்தைக் வேண்டிக் கொண்டோம், நமக்கு ஒரு ஊழியக்காரர்களின் காலை உணவு இருந்தது, இந்தப் பட்டணத்திலுள்ள ஊழியக்கார குழுவை சந்திக்க எனக்கு சிலாக்கியம் கிடைத்தது இதுவே முதல் தடவை. நான் அதிகமாய் அன்புகூருகிற சில மகத்தான மனிதர்களையும், தேவனுக்காக அழைக்கப்பட்ட கிறிஸ்துவின் மகத்தான ஊழியக்காரர்களையும் நிச்சயமாக கண்டு கொண்டேன். நாம் ஏதோவொரு நேரத்தில், இங்கே சிகாகோவுக்குத் திரும்பி வர முடியும் என்று நம்புகிறேன், அப்பொழுது நீங்கள் எல்லாரும் சேர்ந்து அங்கே முழு அளவாக நிரம்பி இருக்கிற இடத்தைக் கொண்டிருக்கலாம், அப்போது ஒரு பெரிய ஐக்கிய கூட்டத்தையும், எல்லாரும் சேர்ந்து ஒரு மகத்தான கூட்டத்தையும் கொண்டிருக்கலாம். இப்பொழுது, அங்கே... சென்ற மாலையில், நாம் வியாதி யஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தோம் என்று நினைக்கி றேன். ஞாயிறு பிற்பகலில், ஆபிரகாமும், அவனுக்குப் பிறகு அவனுடைய சந்ததியும் என்ற பாடத்தின் பேரில் பிரசங்கம் பண்ணினோம். சென்ற இரவில், சரித்திரத்திலேயே உலகத்தைத் தாக்கிய மிகப்பெரிய திடீர் செய்தி (the greatest news flash that ever struck the world in history) என்ற பாடத்தின் பேரில் பிரசங்கம் பண்ணினோம். 6. மேலும் இன்றிரவு, நீங்கள் வேதவாக்கியங்களைத் திருப்பி, மத்தேயு 11ம் அதிகாரம் 6ம் வசனத்தைக் கவனத்தில் கொள்வீர்களானால். நான் இந்த வார்த்தைகளை வாசிக்கிறேன். என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான். இப்பொழுது, 'மறக்கப்பட்ட மலைப்பிரசங்கம்” என்று இந்தப் பாடத்தை நான் அழைக்கப் போகிறேன். நம்மெல்லாருக்கும் மலைப்பிரசங்கங்கள் நன்கு தெரியும். மத்தேயுவின் புஸ்தகம் 5ம் அதிகாரத்தில், இயேசு தம்முடைய ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு அல்லது சரியாக அவருடைய ஊழியத்தைத் தொடங்கின போது, அவர் ஜனங்களைக் கண்டு, அந்த மலையின் மேல் ஏறினபோது, மலைப்பிரசங்கங்களைப் போதித்தார். அப்போது அவர் அவர் களை வழிநடத்துகிற தலைவர் ஆனார். அவர் மேலே ஏறிச்சென்று, மலைப்பிரசங்கங்களைப் போதித்தார். இவ்விதம் பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டிருப் பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்..... என்று தொடங்கி, அதைப் போன்ற மலைப்பிரசங்கங்களை அவர் போதித்தார். 7. இப்பொழுது, இயேசு... க்கு பரிபூரண முன்னடை யாளமாக இருந்தார் அல்லது மோசே இயேசுவுக்கு ஒரு முன்னடையாளமாக இருந்தான். இயேசு மோசேக்கு மூல முன்னடையாளமாக (antetype) இருந்தார். மோசே ஒரு - ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்த ஒருவனாயிருந்தான். அவன் வனாந்தரத்தில் இஸ்ர வேல் ஜனங்கள் மேல் ஒருவிதத்தில் இராஜாவைப் போன் றிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாகவே பிறந்திருந்தான். அவன் பார்வோனிடமிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தான். அது ரோம சாம்ராஜ்யத்திடமிருந்து இயேசு மறைத்து வைக் கப்பட்டிருந்தது போலவே இருந்தது. அவன் - அவனுடைய ஊழியமும் ஜீவியமும் எல்லா நேரமும் முன்னடையாள மாகவே இருந்தது. மோசே, அவன் இஸ்ரவேல் புத்திரர்களை வனாந்தரத்திற்கு அழைத்துக்கொண்டு போன போது, அவன் அந்த மலையின் மேல் ஏறிச்சென்று, கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு, இறங்கி வந்து, அந்தக் கற்பனைகளை உபதேசிக்கத் தொடங்கினான். 8. இயேசுவும் தமது வல்லமைக்குள் வந்த போது, அவர் அந்த மலையின் மேல் ஏறி, உட்கார்ந்து, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான் கள்; தேவனுடைய இராஜ்யம் அவர்களுடையது. உங்களை நிந்தித்து, துன்பப்படுத்தி, நீங்கள் பரியாசம் பண்ணப்படும் போதும் மற்ற காரியங்களைச் செய்யும் போதும், நீங்கள் பாக்கி யவான்கள். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அவர்கள் துன்பப்படுத்தினார்களே. பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருப்பதினால் சந்தோஷப்பட்டு களிகூருங்கள்” என்று ஜனங்களிடம் உபதேசிக்கத் தொடங்கினார். அவர் சரியாக மோசேக்கு மாதிரியாக இருந்தார்.... அல்லது மோசேயுடைய மாதிரி அவருக்கு ஒரு முன்னடை யாளமாக இருந்தது. மோசே எப்படியிருந்தான் என்பதைப் பற்றியும், இயேசு எப்படியிருந்தார் என்பதைப் பற்றியுமான அந்த முன்னடையாளங்களும், அந்த மலைப்பிரசங்கங்கள் உபதேசிக்கப்பட்டதும் நம் எல்லாருக்கும் நன்கு தெரியும். ஆனால் இந்த மலைப்பிரசங்கமோ (Beatitude) 11வது அதி காரம் 6வது வசனத்தில் உள்ளது. நீங்கள் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் அதை மோலோட்டமாக வாசித்து, அதைப் புரிந்து கொள்ளவே மாட்டீர்கள். அது மற்ற வசனங்களுக்கு இடையில் செருகி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஒரு மலைப்பிரசங்கம் தான். 9. அவர், என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவ னோ அவன் பாக்கியவான்” என்றார். பாருங்கள்? "இருதயத் தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். சமாதானம் பண்ணு கிறவர்கள் பாக்கியவான்கள்.” பாக்கியவான்கள், பாக்கியவான் கள், என்று கூறியபடியே வந்து), இங்கே இந்த இடத்தில், அவர் மீண்டும் இந்த மலைப்பிரசங்கத்தை மெல்ல நுழைத்து செருகி வைத்திருக்கிறார். பாருங்கள்? 'பாக்கியவான்.... என்னி டத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கிய வான்.' ஓ, அந்நாட்களில், அது ஒரு மகத்தான நேரமாக இருந்தது. இப்பொழுது, இது ஆரம்பமாக என்ன காரணம் என் பதை நாம் காண்போம், அது புதிய ஏற்பாட்டு எலியாவாகிய, இந்த மகத்தான கரடுமுரடான யோவான் ஸ்நானகனுடைய ஊழியத்திற்கு பிறகு சற்று கழிந்து நடந்தது. அவனிடம் தான் அந்தச் செய்தியானது அனுப்பப்பட்டது. யோவான் தன்னுடைய ஊழியத்தினிமித்தமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தான். ஓ, யோவான் எப்படிப்பட்ட ஒரு கரடுமுரடான ஆளாக இருந்தான். அவன் உண்மையில், மெய்யாகவே, "எனக்கு முன்னே போவான்" என்று இயேசு கூறின அந்த செய்தி யாளனாக இருந்தான். அவன் இயற்கையோடு வாழ்ந்து வந்த ஒரு மனிதனாக (outdoor man) இருந்தான். அவர்கள் அவ னைப் பிடித்த போது, எப்படியிருந்திருப்பான், அவன் முற்றிலுமாக எலியாவைப் போன்றிருந்தான், அவன் எலியா வின் ஆவியினாலே அபிஷேகிக்கப்பட்டிருந்தான். அவன் புதிய ஏற்பாட்டின் அபிஷேகிக்கப்பட்ட எலியாவாக இருந்தான். 10. எப்படியாக அந்த எலியா யேசபேலினுடைய வழியை விரும்பாத ஒரு - ஒருவித மனிதனாயிருந்தான், யோவானும் ஒழுக்கக்கேடாக ஜீவிக்கும் பெண்களை விரும் பாத அதேவிதமான மனிதனாயிருந்தான். எலியா வனாந் தரத்தில் வாழ்ந்தான், யோவானும் அதேவிதமாக வனாந்தரத் தில் வாழ்ந்தான். எலியா தனியாக நின்றது போலவே யோவா னும் ஒருவிதத்தில் தனியாக நின்றான். அந்த மகத்தான, கரடுமுரடான மனிதனை அவர்கள் அந்த வனாந்தரத்தி லிருந்து, பிறகு பழைய, பூஞ்சைகாளான் பிடித்ததும், ஈரமா னதும் பனிப்படலம் போர்த்ததுமாயிருந்த ஒரு சிறைச்சாலை யில் வைத்திருந்தார்கள். அது யோவானுக்கு ஒரு பயங்கரமான அனுபவமாக இருந்தது, அவன் வனாந்தர வெளிகளில் சுதந்திரமாக இருந்து, வெட்டுக்கிளிகளோடு கூட தன்னுடைய இறைச்சி யையும் தேனையும் புசித்து, வனாந்தரத்தில் பிரயாணம் செய்த ஒரு மனிதனாக இருந்தான், அங்கே வனாந்தர வெளிகளில், அவன் எதைப் புசிக்கிறானோ அதைக் கொன்று, தான் விரும்புவதை எடுத்துக்கொள்ள அவனால் முடிந்தது. இப்பொ ழுதோ, அவன் கீழே ஒரு சிறிய பழைமையான, பூஞ்சை காளான் பிடித்த, அழுக்கான சிறைச்சாலையில் இருக்கிறான், அநேகமாக அது எங்கோ ஓரிடத்திலுள்ள இருள் நிறைந்த ஒரு இருண்ட நிலவறையாக இருந்தது. அந்த மனைவியான யேசபேலின் நிமித்தமாக, ஏரோது தன்னுடைய சகோதர னாகிய பிலிப்புவின் மனைவியை எடுத்து, அவளோடு ஜீவிப் பது சரியல்லவென்று யோவான் அவனிடம் கூறினதினிமித் தமாக ஏரோதியாள் அவனை அங்கே (சிறைச்சாலையில்) போட்டிருந்தாள். அவன் அதைச் செய்வது நியாயமல்லாத காரியமாக இருந்தது. 11. எதையும் அப்பட்டமாகவும், வெளிப்படையாகவும் சொல்லிவிடும் (not hold back any punches) மனிதர்களில் ஒருவனாக யோவான் இருந்தான். அவன் அப்படியே அவளைப் பறக்க விட்டான். அது அவனுக்கு எந்த வித்தி யாசத்தையும் ஏற்படுத்தவில்லை. அது தவிர்த்து விலக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்திருக்குமானால், அது தவிர்த்து விலக்கப்பட வேண்டிதாய் இருந்தது. அவ்வளவு தான். அது எலியாவைப் போல. அவன் என்ன கூற வேண்டியிருந்ததோ அதனுடன் அவன் வெளியே தைரியமாக நேராக நின்றான். சரி என்னவோ அது சரியாகவும், அது தவறாக இருக் குமானால், அது தவறாக இருந்தது. தேவனே, இன்று எங்களுக்கு அதைப் போன்றவர்கள் தான் அதிகமாக தேவை, தேவனுடைய வார்த்தையைப் பற் றிய மிகவும் உண்மையான குற்றத்தீர்ப்புகளின் (convictions) பேரில் நிற்கும் மனிதர்கள் தான் எங்களுக்குத் தேவையாயுள்ளது. அதைப் பேசுங்கள், அமைதியாக இருக்க வேண் டாம். அதை உரத்த சத்தமாகப் பேசுங்கள். அதன்பிறகு நாம் அந்த யோவானை அங்கே கண்டு கொள்கிறோம், இந்தச் சிறிய பழைய, பூஞ்சைக்காளான் பிடித்த, அழுக்கான சிறைச்சாலையில் அவன் இருந்தான், அவர்கள் ஒருக்கால் எப்போதாவது அவனிடத்தில் வீசி எறியும் கொஞ்சம் அழுக்கான ரொட்டி தான் (அவனுக்குக் கிடைத்தது). அவன் அநேகமாக மெலிந்து போய் காணப் பட்டான், அவனுடைய வேதாகமத்தை வாசிக்க எந்த வழி யுமே இல்லாதிருந்தது. மேலும் அவன்.... ஒருவித.... அவன்... ஒருசமயம் அவனைப்பற்றி எழுத்தாளன் ஒருவன், "அவனு டைய கழுகுக்கண் தெளிவற்று மங்கலாயிருந்தது" என்று எழுதினான். 12. தீர்க்கதரிசிகள் கழுகுகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். தேவன் தம்முடைய தீர்க்க தரிசிகளை கழுகுகள் என்று அழைக்கிறார். அதற்குக் காரணம் என்னவென்றால், ஒரு கழுகானது பறவைகள் எல்லாவற்றிலும் மிகவும் சக்திவாய்ந்த பறவையாகும். கழுகால் உயரப்போக முடியும், அது மற்ற எந்தப் பறவையைக் காட்டிலும் உயரப் பறக்க முடியும். மற்ற எந்தப் பறவையைக் காட்டிலும் அது ஒரு மேலான கண்ணைப் பெற்றிருக்கிறது. பருந்துக்கு ஒரு கண் இருப்பதைக் குறித்தும், ஒரு பருந்தால் மேலே ஆகாயத்தில் பறக்க முடியும் என்பதைப் பற்றியும், அவர்கள் பேசுகிறார்கள். ஏன், ஒரு பருந்தானது ஒரு கழுகைப் பின்தொடர் முயற்சிக்குமானால், அது ஆகா யத்திலேயே சின்னாபின்னமாகி விடும். அது நிச்சயமாகவே அப்படியாகும். மேலும் இப்பொழுது, அங்கிருந்து மீண்டும் கீழே பூமியை நோக்கி திரும்பிப் பார்க்கும்படிக்கு அந்தக் கழுகு போதுமான கண்ணைப் பெற்றிராவிட்டால், அது அங்கே மேலே போவதனால் என்ன நன்மை ஏற்படப் போகிறது? அது அப்படியே இதைப் போன்றது. நாம் எதைக் குறித்து குதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறியாவிட்டால், நாம் ஏன் மேலே குதித்துக் கொண்டி ருக்கிறோம்? புரிகிறதா? ஒரு சத்தம் எழுப்புவதைக் குறித்து நாம் எதையும் பெற்றிராமல் இருப்போமானால், நாம் ஏன் அதிகமாக சாட்சி கூறிக் கொண்டிருக்கிறோம், அல்லது நாம் ஏன் அதிக சத்தம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்? புரிகிறதா? இப்பொழுது அது வித்தியாசமாக உள்ளது; ஒரு சத்தம் எழுப்புவதைக் குறித்து நீங்கள் ஏதோவொன்றைப் பெற்றிருப்பீர்களானால், அந்தச் சத்தம் அருமையானது தான். ஆனால் முதலில் அது வருகிற வரையில் காத்திருங்கள், அப்பொழுது உங்கள் வாழ்க்கை முழுவதும் சத்தமாயிருக்கும். 13. ஆனால் இந்தக் கழுகுக்கண் மங்கலாகிப் போய் விட்டிருந்ததை நாம் கண்டுகொள்கிறோம், ஏனென்றால் அவர்கள் அவன் வாழ்ந்த இடமாகிய அந்த வனாந்தரத்தை விட்டு அவனை வெளியே எடுத்து, ஒரு பழைய அழுக்கான, ஊசல் வாடையுடைய சிறைச்சாலைக்குள் அவனை அடைத்து வைத்திருந்தனர். உயர ஆகாயத்தில் பறக்கும் ஒரு கழுகாக இருக்க முடிந்த இம்மகத்தான மனிதன். இப்பொழுது, நீங்கள் உயர போகும்போது, இன்னும் உங்களால் தூரத்தில் பார்க்க முடியும். அவர்கள் இப்பொழுது இந்த பலூன்களிலும் மற்றும் காரியங்களிலும் மேலே போகிறார்கள், அப்பொழுது அவர் களால்.... முடியும். எனவே உயரே ஆகாயத்தில் இருந்து முழு பூமியின் புகைப்படத்தையும் அதனுடைய வளைவில் வைத்து அவர்களால் எடுக்க முடியும். ரஷ்யாவிடம் இருக்கிற இந்தப் புதிய சிறு பொறிய மைப்பில், ஏறக்குறைய ஒரு மணி 45 நிமிடங்களில் உலகத்தைச் சுற்றி கடந்துவர முடியும் என்று நினைக்கிறேன். ஏன், அது சுழலும் போது, அந்த முழு இயங்கு திரைப் படத்தையும் அவர்களால் எடுக்க முடியும். ஆனால் நீங்கள் உயர போக போக, உங்களால் இன்னும் அதிகமாக காண முடியும். ஆகையால், வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசிகள், உயர சபைக்கும் மேலாகப் பறந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதைக் கண்டுபிடித்து, பிறகு திரும்ப கீழே வந்து, செய்திகளைக் கொண்டுவரக்கூடிய அந்தக் கழுகுகளாக இருந்தார்கள். பாருங்கள்? ஆகையால், கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வந்தது. யோவான் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தான் (caged off), ஏன், அந்தக் கழுகுக் கண்ணானது மங்கலாகி யிருந்தது. 14. நான் ஒருமுறை ஒரு பெரிய கழுகுக்காக மிகவும் வருந்தினேன். ஒரு மிருகக்காட்சி சாலைக்குப் போவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்தப் பரிதாபத் திற்குரிய உயிரினங்களை கூண்டில் அடைத்து வைத்திருப் பதை நான் காணும் போது. சிங்கங்கள் மற்றும்... அது எப்படி யாக வாழ்நாள் முழுவதும் அடைபட்டிருக்கிறது. ஒருமுறை சிறு சாராவும் நானும் இங்குள்ள சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் சுற்றிலும் நடந்து கொண்டிருந்தோம். தாயார் எங்கள் போஜனத்தை ஆயத்தம் செய்து கொண்டிருந்தாள். நாங்கள் அங்கே மேலே பிள்ளைகளோடு இருந்தோம். அவர் கள் சிறிய படகில் சவாரி செய்து, அந்தக் குரங்குகளையும் இன்னும் என்னவெல்லாம் உண்டோ அவைகளைப் பார்க்க விரும்பினார்கள். எனவே தாயார் போஜனத்தை ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில், நாங்கள் சுற்றிலும் நடந்து வந்து கொண் டிருந்தோம். அப்போது நான் ஒரு சத்தத்தை கேட்டு, அது என்னவென்று காணும்படியாக மலையின் அடிவாரத்தில் இறங்கிச் சென்றேன். அவர்கள் அப்போதுதான் ஒரு பெரிய கழுகைப் பிடித்து, ஒரு கூண்டில் அடைத்திருந்தனர். 15. அங்கேயிருந்த அந்தப் பரிதாபமான பறவையை நான் நோக்கிப் பார்த்தேன், அதனுடைய தலை முழுவதும் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்த இறகுகள் எல்லாம் அதனுடைய தலையை விட்டும், அதனுடைய சிறகுகளின் முனைகளிலிருந்தும் விழுந்தது (beat off). அந்தப் பெரிய பறவை அங்கே குறுக்காக நடப்பதைக் கவனித்தேன். இதோ பிறகு அது வந்து, கழுகு பறப்பது போன்று எழும்பிப் பறக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அப்போது அதனுடைய தலை யானது அந்த உலோகக் கம்பியின் மேல் பட்டு, அதை பின்னோக்கி மோத வைத்து, அது தரையின் மேல் விழுந்து, அது அங்கே கிடந்து அந்தப் பெரிய கண்களை உருட்டி, இவ்விதமாக மேலே நோக்கிப் பார்த்து விட்டு, மறுபடியும் திரும்பிச் சென்றது, இதோ அது வந்து மீண்டும் அந்த உலோகக் கம்பிகளின் மேல் பட்டு மோதியது. அது அதன் மேல் மோதிய காரணத்தினால்) இரத்தமும் சிறகுகளும் அதிலிருந்து (விழ, அதனுடைய முதுகின் மேல் கிடந்து, அந்தப் பெரிய கண்களை உருட்டி மேலே பார்த்தது. ஏன்? அது ஒரு வானத்துக்குரிய பறவையாக இருந்து, அது எங்கே இருக்க வேண்டுமோ அவ்விடத்தை நோக்கி மேலே பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் மனிதனுடைய சில தந்திரமான உபாயங்கள் (கருவிகள்) (cunning deviceties) அதை ஒரு கூண்டுக்குள் அடைத்து வைத்திருந் தது. அது மிகவும் பயங்கரமான பரிதாபத்திற்குரிய காட்சி என்று நினைத்தேன். அந்தக் கழுகை விடுவிக்கும்படிக்கு, அதை வாங்க, நான்-நான் என்னுடைய முதலாவது காணிக் கையை எடுத்திருக்க வேண்டியிருந்தாலும், நான் அந்தக் கழுகை விலைகொடுத்து வாங்கியிருப்பேன். நான், அந்தப் பரிதாபமான பறவை" என்று நினைத்தேன். 16. நான், "என்னே , அது பயங்கரமாக இல்லையா. அது... உயர வானத்தில் பறக்கும்படி பிறந்த ஒரு பறவை, மனிதர் களுடைய உபாயங்களினால் இதோ முழுவதுமாக கூண்டுக் குள் அடைக்கப்பட்டிருக்கிறது. அது அப்படியே தன்னுடைய மூளையை மோதி அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுவோ கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறது. நான் எப்பொ ழுதும் கண்டதிலேயே அது மிகவும் பயங்கரமான காட்சி" என்று நினைத்தேன். அதன்பிறகு நான் அங்கிருந்து நடந்து செல்லும்படி திரும்பின போது, ஆமாம், அது ஒரு பயங்கரமான காட்சி தான், ஆனால் நான் அதைக் காட்டிலும் அதிக பயங்கரமான ஏதோவொன்றைக் கண்டிருக்கிறேன்: தேவனுடைய குமாரர்க ளாகவும் குமாரத்திகளாகவும் இருக்கும்படி பிறந்த மனிதர்க ளையும் பெண்களையும் காணும்போது, அவர்களும் ஏதோ வொரு விதமான கூண்டில் அடைக்கப்பட்டுத்தான் இருக்கி றார்கள், அதன்பிறகு அவர்கள் மேலே நோக்கிப்பார்த்து, அங்கே ஒரு பரலோகத்தின் தேவன் இருக்கிறார் என்றும், அவர் ஒரு மகத்தான சுகமளிப்பவர் என்றும், அவர் ஒரு மகத்தான எஜமான் என்றும், அவர் ஒரு மகத்தான இரட்சகர் என்றும் அறிந்தும், அதன்பிறகு ஏதோவொரு வகையான ஸ்தாபன சபை சம்பந்தமான கூண்டில் அடைக்கப்பட்டு, அங்கு அவர்கள் அப்படியே எல்லாவிதமான சங்கங்க ளோடும், மற்ற எல்லாவற்றோடும் தங்கள் மூளைகளை மோதி அடித்துக் கொள்கிறார்கள், அவர்களால் ஒருபோதும் அந்தக் கூண்டை விட்டு வெளியே வர முடியவில்லை” என்று நினைத்தேன். அது ஒரு பரிதாபகரமான நிலையாகும். இருந்த ஒரு மகத்தான தேவனைக் குறித்து அவர்கள் எல்லாரிடமும் சொல்லி, எதிர்பார்ப்புகளின் கீழாக அவர்களைக் கட்டி யெழுப்பிப் பாருங்கள், அப்போது அவர்களுக்குக் கீழாக இருந்து அந்த முழு காரியத்தின் ஒழுங்கையும் குலைத்துப் போடுவார்கள் (knock the whole thing out). அவர் மரித்து கல்லறையில் வைக்கப்பட்டார். அதைக் குறித்ததெல்லாம் அவ்வளவுதான். அவர் வழக்கமாக இருப்பது போன்று இல்லை . அது ஒரு பரிதாபகரமான காட்சியாகும். தேவனு டைய பிள்ளைகளாக இருக்கும்படி பிறந்த ஜனங்களாகிய மனிதர்களும் ஸ்திரீகளும் அதைப்போன்ற அப்படிப்பட்ட காரியங்களுக்குள் அடைக்கப்பட்டிருப்பதைக் காணும்போது. 17. யோவான், அவனுடைய கழுகுக் கண்ணானது உண்மையிலேயே தெளிவற்றதாக மங்கலாயிருந்தது (filmed over). யோவான் சோர்ந்து போயிருந்தான். அவனும் எலியா வும் பெரிய அளவில் ஒன்று போலவே இருந்தார்கள், ஏனென்றால் ஒரே ஆவி தான் இந்த - வித்தியாசமான ஒரு மனிதன் மேலும் இருந்தது. பாருங்கள், தேவன் ஒருபோதும் தம்முடைய ஆவியை எடுத்துக்கொள்வதில்லை; அவர் வெறுமனே தம்முடைய மனிதனைத் தான் எடுத்துக்கொள் கிறார். தேவன் எலியாவை எடுத்துக்கொண்ட போது, எலியா வின் ஆவியை எடுத்து, அதை எலிசாவின் மேல் வைத்தார். அதன்பிறகு அவர் அதை எலிசாவை விட்டு எடுத்து, அதை யோவானின் மேல் வைத்தார். மீண்டும் சரியாக முடிவு காலத்திலும் அதை வைப்பதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணி யிருக்கிறார். இன்னுமொருவன் முடிவு காலத்தில் வருகிறான், வேறொரு எலிசா . அது நமக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டுள்ளது என்பதை வேத வாசகர்களாக நாம் எல்லாரும் அறிவோம். இப்பொழுது, அப்படியானால் பிசாசும் தன்னுடைய மனிதனை எடுத்துக்கொள்கிறான், ஆனால் ஒருபோதும் அவ னுடைய ஆவியை எடுத்து விடுவதில்லை என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவன் தொடர்ந்து அதேவிதமாகவே அதை கீழாக வரும்படி செய்கிறான். அவ்விருவரும் ஒன்றாக இருப்பதை நாம் கண்டுகொள்கிறோம். எலியாவும் யோவானும் பெரிய அளவில் ஒன்று போலவே இருந்தார்கள் என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவர்கள் மிகவும் பதட்டமடைகிற மனிதர்களாக இருந்தார் கள். அவர்கள் இருவருமே ஏறக்குறைய தீவிரமாக உணர்ச்சி வசப்பட்டு பதட்டமடைகிற நிலையை (nervous breakdown) உடையவர்களாயிருந்தார்கள் : அவர்கள் இருவருமே அப்படியிருந்தார்கள். தேவனோடு நெருங்கி ஜீவிக்கிற மனிதர்கள் பெரும் பாலும் நரம்புக் கோளாறு உடையவர்கள் என்றோ அல்லது அவர்களுக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்றோ கருதப்படுகிறார்கள். அது சரியே. அவர்கள் எப்போதுமே அவ்வாறு எண்ணப்படுகிறார்கள். 18. பவுல், இந்தக்காலையில், நான் ஊழியக்கார குழுவி னரிடம் பேசிக் கொண்டிருந்த போது... அகிரிப்பா பவுலிடம் பேசினான், அல்லது பெஸ்து, "மிக அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது, அல்லது பித்துபிடித்தவனாக்கு கிறது என்றான். அவனோ, "நான் பைத்தியக்காரனல்ல. நான் பித்து பிடித்தவனல்ல. நான் தெளிந்த புத்தியுடைவன் (sober)" என்றான். பாருங்கள்? "நான் -நான் சரியாக இருக்கிறேன்." அவர்கள் அவ்விதமாக உரிமை கோருகிறார்கள், வில்லியம் கூப்பர், அது தான் என்று நம்புகிறேன், நான் அங்கே லண்டனில் அவருடைய கல்லறையில் நின்றிருந்த போது. மேலும் அவர் அந்த பிரபலமான பாடலை எழுதினார். இம்மானுவேலின் இரத்த நாளங்களிலிருந்து பாயும், இரத்தத்தினால் நிறைந்த ஒரு ஊற்றுண்டே, அவ்வெள்ளத்தில் பாவிகள் மூழ்கும் போது, தங்கள் பாவக்கறைகள் யாவற்றையும் போக்கிக் கொள்கின்றனர். 19. அவன்.... பிறகு ஆகும் அளவுக்கு அந்த மனிதன் மிகவும் ஊக்குவிக்கப்பட்டிருந்தான். அவன் ஒரு கயிற்றை எடுத்து, தன்னைத்தானே தூக்கிலிட முயற்சித்தான், கயிறோ அறுந்து போனது. அவன் தற்கொலை செய்யும்படியாக நதிக்குப் போக முயன்றான், அந்த வாடகை வண்டியால் நதியைக் கண்டுபிடிக்க கூட முடியாதிருந்தது, அது மிகவும் மூடுபனியாக இருந்தது. அந்த ஊக்குவித்தலானது எப்படியாக ஒரு மனிதனைப் பிடித்து, அவனைத் தூரமாகப் பிடித்துக் கொள்கிறது என்பதைக் காண்பிக்கத்தான்... அதன்பிறகு அவர் அதைவிட்டு வெளியே வருகிற போது.... ஸ்டீபன் ஃபாஸ்டர் இந்த தேசத்திற்கு மிகவும் மகத்தான நாட்டுப்புற பாடல்களைக் கொடுத்திருப்பது போன்று. வயதான கறுப்பராகிய ஜோ" "ஸ்வானீ நதியில்," பழைய கென்டக்கி வீடு" (போன்ற பாடல்கள்.) அவருக்கு ஏவுதல் ஏற்படும் ஒவ்வொரு முறையும் ஒரு பாடலை எழுதி விட்டு, பிறகு குடியில் மூழ்கி விடுவார். இறுதியாக, அவர் - அதற்கு கீழே இருந்த போது, அவர் அந்த ஏவுதலுக்குக் கீழிருந்து வெளியே வந்த போது, ஒரு வேலைக்காரனைக் கூப்பிட்டு, ஒரு சவரக்கத்தியை (razor) எடுத்து, தற்கொலை செய்து கொண்டார். 20. தீர்க்கதரிசியாகிய யோனாவைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன், தேவன் அவனுக்கு ஏவுலைக் கொடுத்துக் கொண்டிருந்தார், அவன் ஆகாயத்தைச் சேர்ந்த அந்நாளின் மகத்தான கழுகாயிருந்தான். அவன் அங்கு சென்று, மூன்று பகலும் இரவுமாக திமிங்கலத்தின் வயிற்றில் படுத்திருந்து, பிறகு வெளியே கரையில் நடந்து சென்று, அந்த ஜனங்கள் தங்கள் மிருகங்களுக்கு கூட இரட்டுடுத்தச் செய்யும்படியான ஒரு செய்தியைக் கொடுக்கும் அளவுக்கு, தேவன் அவனுக்கு அவ்வண்ணமாக ஆவியின் ஏவுதலைக் கொடுத்தார். பிறகு ஆவியானவர் அவனை விட்டுப் போன போது, அவன் மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, உட்கார்ந்து, அவனை சாக விடும்படி தேவனிடம் கேட்டான். அது சரியே. யோவானுக்கு முன்னடையாளமாயிருந்த இந்த மகத்தான எலியாவை நாம் கண்டுகொள்கிறோம், அவன் அந்நாளின் மகத்தான கழுகாக இருந்தான், அவன் பலமுள்ள, கரடுமுர டான மனிதனாகவும், மகத்தான காட்டு மனிதனாக (woodsman) இருந்தான், அவன் காட்டிலுள்ள ஒரு குகையில் வாழ்ந்தான். பிறகு அவன் வெளியே வந்து, ஜனங்கள் மத்தியில் கோபத்தோடே சென்றான் (stomped out), இஸ்ர வேலர் அதைக் குறித்து எதையுமே அறிந்திராத உயர்ந்த இடங்களுக்குள் தேவன் அவனை எடுத்துச் சென்று, செய்தியை அறிவித்து, அவன், கர்த்தர் உரைக்கிறதாவது" என்று கூறிவிட்டு, கோபத்தோடே கால்களை உதைத்து நடந்து (stomp back), மறுபடியும் வனாந்தரத்திற்குள் திரும்பிப் போய் விட்டான். 21. அந்த மகத்தான கழுகைப் பாருங்கள், அவன் அங்கே வெளியே கோபத்தோடு நடந்து சென்று, அந்த இராஜாவைப் பார்த்து, "என் வாக்கின்படியே அன்றி வானத் திலிருந்து பனி கூட பெய்யாதிருக்கும்” என்று கூறி விட்டு அங்கே வெளியே திரும்பி நடந்து போய் விட்டான், அவன் அந்நாளில் தன்னுடைய கையில் அந்தக் கோலோடும், அந்த ஆட்டுத்தோல் துண்டை தன்னைச் சுற்றிலும் போர்த்துக் கொண்டும், அந்த வழுக்கைத் தலை பிரகாசித்துக் கொண்டும், கன்னமீசை கீழே தொங்கிக்கொண்டும் இருக்க, சமாரியாவின் சாலையில் (Samaritan road) நடந்து சென்ற போது, அந்தக் காலடிகள் அவைகளால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு உறுதியாக (திடமாக) இருந்தன, அவன் அந்த சமாரியா சாலையில் (Samaritan road) வந்து கொண்டிருந்தான்... ஆனால் அவன் யாருடைய பிரசன்னத்தில் இருந்திருந்தான் என்பதை அறிந்திருந்தான். ஆகாப் என்ன சொல்லப் போகிறானோ என்று அவன் பயப்படவில்லை, ஏனென்றால் ஆகாபைக் காட்டிலும் மகத்தான (பெரிய) யாரோ ஒருவரின் பிரசன்னத்தில் அவன் இருந்திருந்தான். அவன் அந்தப் பிரசன்னத்தில் இருந்து, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். அந்த வயதான கண்கள் அந்தச் சுருக்கங்களோடு அங்கே பின்னால் இருந்து, ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் உறுதியாக நடந்து கொண்டிருந்தான், ஏனென்றால் கர்த்தர் உரைக்கிற தாவது என்பதை தான் உடையவனாயிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான். 22. ஓ, அவன் ஒரு கழுகாக இருந்தான். அவன் அந்த மலையின் உச்சிக்கு ஏறிச் சென்று, அங்கேயிருந்த அந்த ஓடை வறண்டு போவது வரையில், அவன் அதிலிருந்து தண்ணீர் குடித்தான், பிறகு அவன் அங்கிருந்து திரும்பவும் இறங்கி வந்து, ஒரு - ஒரு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தான். தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்த போது, அவன் மலையின் உச்சிக்கு ஏறிச்சென்று, 'யார் தேவன் என்று நிரூபித்துப் பார்த்து விடுவோம். யார் தேவன் என்று பார்த்து விடுவோம். அவர் எப்பொழுதாகிலும் தேவனாக இருந்திருப்பாரென்றால், அவர் இன்னும் தேவனாகவே இருக் கிறார்" என்றான். அது சரியே. ஓ, எனக்கு அந்தக் கழுகு களைப் பிடிக்கும். ஆம், ஐயா. அவன் அங்கே மேலே சென்று, அவர்... நாம் தேவனை நிரூபித்துக் காட்டுவோம்" என்றான். அவன் சொன்னான் - தேவன் தரிசனத்தில் அவனுக்குச் சொன்ன விதமாகவே அவன் கூப்பிட்டான். அவன், "நீங்கள் ஒரு காளையை எடுத்துக்கொள்ளுங்கள், நானும் ஒரு காளையை எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் பாகாலை நோக்கிக் கூப்பிடுங்கள், நான் தேவனை நோக்கிக் கூப்பிடுகிறேன். அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்" என்றான். 23. அவன் தானே தன்னைக் குறித்து மிகவும் நிச்சயமுடையவனாயிருக்கையில், அவன் தன்னுடைய தரிசனத்தைக் குறித்து மிக நிச்சயமுடையவனாக இருந்தான். அவர்கள் காலை நேரம் முழுவதும் பாகாலை நோக்கிக் கூப்பிட்டுக் கொண்டும், தங்களைத்தானே கீறிக்கொண்டும், கூச்சல் போட்டுக்கொண்டும், குதித்துக்கொண்டும் இருக்கை யில், அவனோ சுற்றிலும் நடந்து வந்து, " கூப்பிடுங்கள், ஒருக்கால் நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிக சத்தமாக கூப்பிடுவது நல்லது. ஒருக்கால் அவன் அலுவலாயிருப்பான் (pursuing), அல்லது ஒருவேளை தூங்கிக் கொண்டிருப்பான்” என்றான். நீங்கள் பாருங்கள்? ஓ, அவன் எங்கே நின்று கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். அதுதான். ஆனால் அவன் தேவனை நிரூபித்தப் பிறகு, அவனுடைய கழுகுக் கண்ணின் பார்வை மங்கலாகி விட்டது. யேசபேல் அவனைக் கொன்று போடுவதாக அவள் பய முறுத்தின போது, அவன் வெளியே வனாந்தரத்திற்கு ஓடிப்போனான். ஒரு சூரைச்செடியின் கீழ் படுத்திருந்த தமது ஊழியக்காரனை தேவன் கண்டுபிடித்தார், தேவனே தேவன் என்று அவன் நிரூபித்த பிறகு, அவன் பதட்டத்தோடு, நிலைகுலைந்தவனாக ஓடிப்போனான். நீங்கள் உயர அந்த மண்டலங்களுக்குள் போகும்போது, அது மனித இருதயத்திற்கு எதையோ செய்கிறது. நீங்கள் கீழான நிலைக்கு வரும்போது, உங்களால் - உங்களால் அதை விளக்கிக்கூற முடியாது. அது உங்களை எங்கேயோ கொண்டு செல்கிறது; அதைக் குறித்து பேச முயற்சிக்க வேண்டிய அவசியமில்லை. உங்களை சுக்குநூறாக கிழித்துப் போடுகிற தரிசனங்களும் மற்றவைகளும்... மற்ற ஜனங்களிடம் உங்களால் அதைக் கூற முடியாது; அவர்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒருபோதும் இருந் திருக்கவில்லை, எனவே நீங்கள் எப்படி அதைக் குறித்து அறிந்து கொள்வீர்கள்? புரிகிறதா? எனவே அது அவர்களை சுக்குநூறாகக் கிழித்துப் போடுகிறது. 24. அப்படியிருந்த போதிலும், வெளியே சூரைச்செடி யின் கீழிருந்த அவனைப் போஷித்து, அவனைத் தைரியப் படுத்துவதற்கு தேவன் தமது ஊழியக்காரனுக்கு மிகவும் தயவுள்ளவராயிருந்தார். ஆனால் அவன் யேகோவாவில் அப்படிப்பட்ட உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருந்த பிறகு, அவன் மிகவும் உறுதியோடிருந்து, இராஜாவுக்கு முன் பாக நடந்து சென்று, என் வாக்கின்படியே அன்றி பனி கூட பெய்யாது" என்று கூறிவிட்டு, இராஜாவின் அரண்மனையை விட்டு கால்களை மிதித்தபடி நடந்து போய் விட்டான், அபி ஷேகம் பண்ணப்பட்டவன். அதன்பிறகு என்ன செய்ய வேண்டுமென்ற ஒரு தரிசனம் அவனுக்குக் கிடைத்தது. பிறகு அவன் அங்கே வெளியே அந்த மலையின் மேல் சென்று, எடுத்து - வானத் திலிருந்து அக்கினியை வரவழைத்து, அவரே தேவன் என் பதை நிரூபித்து, பிறகு அதே நாளிலேயே வானங்களிலிருந்து மழையை வரவழைத்தான், அதன்பிறகு அவன் நானூறு மனிதர்களைக் கொன்று போட்டான். ஆசாரியர்கள், அந்நிய தெய்வத்தின் ஆசாரியர்களுடைய தலைகளை வெட்டிப் போட்டான், பிறகு தரிசனம் அவனை விட்டுப்போன போது, அவன் ஓடிப்போனான். 25. அவன் பதட்டமுள்ளவனாக, அங்கே வெளியில் உட்கார்ந்திருந்து, "நான் என்னுடைய மற்ற பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல. மற்ற எந்தத் தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் நான் மேலானவன் அல்ல. இப்பொழுதும், கர்த் தாவே, என்னுடைய ஜீவனை எடுத்துக்கொள்ளும். நான் மட்டுமே மீதியாயிருக்கிறேன். சரியான சுவிசேஷத்தைப் பிர சங்கம் பண்ணிக்கொண்டிருப்பது நான் மாத்திரமே. எனவே அப்படியே என்னுடைய ஜீவனை எடுத்துக்கொள்ளும். நான் போகட்டும்" என்றான். அவர்கள் அவ்விதமாக முழுவதும் கலக்கமடைந்து விடுகிறார்கள். ஆனால் தேவனோ, இல்லை, நான் -நான் - நான் -நான் வைத்திருக்கிறேன் - பாகாலுக்கு தங்கள் முழங்காலை ஒருபோதும் முடக்காதிருக்கிற 7000 பேரை நான் இன்னும் வைத்திருக்கிறேன். (பாருங்கள்?) ஆனால் நான் - அதெல் லாம் சரிதான் எலியா, நீ ஒரு மகத்தான வேலையைச் செய்து கொண்டிருக்கிறாய். ஆனால் நீ இதுவரையிலும் அறிந்திராத வேறொரு கூட்டம் பேரை இன்னும் நான் - நான் வைத்திருக் கிறேன் (நீங்கள் பாருங்கள்?)” என்றார். ஆனால் என்னுடைய ஜீவனை எடுத்துக்கொள்ளும். என்னுடைய பிதாக்களைப் பார்க்கிலும், எனக்கு முன்பு இருந்த தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் நான் மேலானவன் அல்ல. நான் மரிக்கட்டும்." 26. இதோ யோவான் இருக்கிறான், ஒட்டுமொத்தமாக நிறைய பேர் அவனைப் போன்றே இருக்கிறார்கள், அவன் இங்கே சிறைச்சாலையில் கீழே படுத்துக்கொண்டிருக்கிறான், அவன் தான் செய்த பணியிலிருந்து வெளியேறியிருந்தான். அவன் யோர்தானின் கரைகளில் நின்ற பிறகு, வனாந்தரத் திலிருந்து வெளியே வந்தான், அவன் தாயின் வயிற்றில் இருக்கும்போதே, அவன் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டான். நிச்சயமாக அவன் பெற்றிருந்தான். எப்படி? இயேசு கிறிஸ்து என்ற நாமத்தை அவன் முதலாவது கேட்ட போதே அவன் அதைப் பெற்றுக்கொண்டான். மரியாள் அங்கு மேலே வந்த போது, அவள்... அவள் இன்னும்... அவள் ஒருபோதும் எதையும் உணர்ந்திருக்கவில்லை. தூதனானவர் அப்பொழுதான் அவள் மேல் நிழலிட்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் அவளிடம் கூறியிருந்தார். அவள் யூதேயாவுக்குப் புறப்பட்டுச் சென் றிருந்தாள். அவள் - அவள் தாயாகப் போகிறாள் என்று அவள் எலிசபெத்திடம் கூறினாள், அவள், "தேவன் என்மேல் நிழ லிட்டிருக்கிறார். நான் ஒரு குழந்தையைக் கொண்டிருக்கப் போகிறேன். நான் அவருடைய பெயரை இயேசு என்று அழைப்பேன் என்று சென்னார்” என்றாள். குட்டி யோவா னுக்கு ஏற்கனவே ஆறு மாதங்கள் ஆகியிருந்தது, எலிசபெத் தன்னுடைய தாய்மை நிலையில் இருந்தாள், அவள் கர்ப்பம் தரித்திருந்தும், அவள் இன்னும் கூட ஜீவனை உணரவில்லை . 27. எனவே அவள் நின்று கொண்டிருக்கையில், மரியாளின் முகத்தை நோக்கிப் பார்த்தாள், என்ன சம்பவிக்கப் போகிறது என்று பரிசுத்த ஆவியானவர் கூறினதை மரியாள் அவளிடம் கூறிக்கொண்டிருந்தாள், மேலும் ஒரு வயதான ஸ்திரீ கருவுற்றிருந்தாள் என்பதையும், அதன்பிறகு அவளு டைய கணவன் எவ்வாறு ஊமையாக அடிக்கப்பட்டான் என் பதைக் குறித்து அவளுக்கிருந்த அனுபவத்தைக் குறித்தும் கூறியிருந்தாள். அங்கே நின்று கொண்டிருக்கையில், அவள், "நான்...” என்றாள். அவள் எப்படியாக ஒரு குமாரனைக் கொண் டிருக்கப் போகிறாள் என்றும், அவருடைய பெயரை இயேசு என்று அழைக்கப் போகிறாள் என்றும் கூறினாள். இயேசு என்ற அந்த விலையேறப்பெற்ற மகிமையான நாமமானது ஒரு மனித உதடுகளில் முதலாவது பேசப்பட்ட உடனே, அதனுடைய கருப்பையில் இருந்த ஒரு சிறு மரித்த குழந்தை துள்ளிக் குதித்து, ஜீவனை அடைந்து, தாயின் வயிற்றிலேயே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டது. "என் ஆண்டவருடைய தாயார் வந்தது எதினால் கிடைத் தது? நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று" என்றாள். அவனுடைய தாயின் வயிற்றிலிருந்தே பரிசுத்த ஆவியால் நிறைந்தவனாய் அவன் பிறந்ததாக வேதாகமம் கூறியுள்ளது. தேவனால் அழைக்கப்பட்ட ஒரு மனிதன், அவன் ஒன்பது வயதிலேயே வெளியே வனாந்தரத்துக்கு வந்து விட்டான், அவனுக்கு எந்தக் கல்வியும் கிடையாது, அவன் வனாந் தரத்திற்குப் புறப்பட்டுச் சென்று, காட்டில் வாழ்ந்த ஒரு மனிதனாக இருந்தான். 28. முப்பது வயதில், அவன் வனாந்தரத்தை விட்டு வெளியே வந்து, வருகிற ஒரு மேசியாவைக் குறித்த அப்படிப்பட்ட ஒரு செய்தியைப் பிரசங்கித்து, அந்தப் பிரதே சத்தையே அசைத்தான். பரிசேயர்களுடைய உபதேசத்தைக் குறித்து அவன் பயப்படவில்லை . அவன் கூறினான் - அவன், 'நீங்கள் புல்லில் இருக்கும் பாம்புகள், எங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் எங்களுக்கு உண்டு என்று சொல் லிக்கொண்டு இங்கே நீங்கள் வர வேண்டாம். நீங்கள் விரியன் பாம்புக்குட்டிகள். வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?" என்று கூறி னான். ஓ, என்னே. அவன் கடுமையாக இருந்தான். அவன், தூற்றுக்கூடையை தம்முடைய கையில் வைத்துக்கொண்டு வருகிற ஒரு மேசியாவைக் குறித்து நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். (ஆமென்.) அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியி னால் சுட்டெரிப்பார்” என்றான். வியூ. அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான் என்பதை அறிந்திருந்தான். 29. இப்பொழுது, ஆனால் இறுதியில் இந்த மேசியா வந்த போது, கடைசியில் மேசியா வந்த போது, அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் கனத்தை யோவோன் கொண் டிருந்தான்.... அவர் அப்படியே - அப்படியே முற்றிலும் சரியாக வந்தார். அடையாளங்கள் எல்லாம் சரியாகவே இருந் தன. அவர் மேசியாவின் அடையாளத்தைக் காண்பித்தார், யோவான் அதை அறிந்திருந்தான், அவர் அந்த மேசியாவாக இருந்தார். அதுதான் அந்த மேசியா. அங்கே அதைக் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. யோவான், ஒரு புறாவின் ரூபத்தில் அவர்மேல் இறங்கின அந்த அக்கினிஸ்தம்பத்தை, ஒளியை நான் கண்டேன், அந்த ஒளியின் தூணிலிருந்து ஒரு சத்தம் பேசி, 'இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்' என்று கூறினதை நான் கண்டேன்” என்றான். அவர் தான் மேசியாவென்று அவன் அறிந்திருந்தான். யோவான், அவரை எனக்குத் தெரியாது, ஆனால் வனாந் திரத்தில் இருந்த அவர், நான் போய் தண்ணீரால் ஞானஸ் நானம் கொடுக்க வேண்டுமென்றும், ஆவியானவர் யார்மேல் இறங்கி தங்குவதைக் காண்பாயோ, அவர் தான் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப் பார்' என்றார். இது அவர் தான் என்று நான் நிச்சயமுடை யவனாயிருக்கிறேன்" என்றான். எனவே அவன் அதை அழுத்தமாக கண்டித்தான். 30. ஆனால் பிரச்சனை ஆரம்பித்து, இயேசு வந்து, (அவன்) மேசியாவைக் காண்பித்த போது, அவர் தான் மேசியாவாக இருந்தார். ஆனால் பிறகு ஏதோ தவறாகிப் போய்விட்டது. ஒரு தூற்றுக்கூடையை தம்முடைய கையில் வைத்துக்கொண்டு, பதரைச் சுட்டெரிக்கப் போகிற மேசி யாவை யோவான் அறிமுகப்படுத்தியிருந்தான். ஆனால் இயேசுவின் கிரியைகளை அவன் கண்டபோது, அவரோ சாந்தகுணமுள்ளவராகவும் தாழ்மையுள்ளவராகவும் இருந்தார். எனவே அது அவனைச் சோர்வடையச் செய்தது. அவனுக்கு தெரியாதிருந்தது - என்ன சொல்லுவதென்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் - அவன், "இப்பொழுது இங்கு எங்கோ ஏதோ தவறுள்ளதே" என்று எண்ணினான். அவன் - அவன் தவறான காரியத்தை நம்பி விட்டது போன்று தோன்றியது. அது சரியாக கிரியை செய்யவில்லை என்பது போன்று காணப்பட்டது. அது சரியாக கிரியை செய்வதில்லை என்று நாமும் கூட அநேக நேரங்களில் நினைக்கிறோம். ஆனால் அது சரியாகவே கிரியை செய்து கொண்டிருக்கிறது. அவர் இங்கேயிருக்கிறார் என்று நாம் அறிந்திருக்கும் காலம் வரையில் அது எந்த வித்தியாசத்தை ஏற்படுத்தும்? அது சரியாகவே கிரியை செய்து கொண் டிருக்கிறது. அது கிரியை செய்ய வேண்டுமென்று நாம் நினைக்கும் விதமாக அது ஒருக்கால் கிரியை செய்யாமல் இருக்கலாம், ஆனால் அது கிரியை செய்ய வேண்டுமென்று தேவன் விரும்புகிற விதத்தில் அது கிரியை செய்துகொண்டு தான் இருக்கிறது. 31. நீங்கள், "நல்லது..." என்று கூறலாம். யோவான், நல்லது, இப்பொழுது, தமது கரத்தில் தம்முடைய தூற்றுக் கூடையை வைத்திருந்த ஒரு மேசியாவை அறிமுகப்படுத்தி னேன், அவர் களத்தை விளக்கப் போவதாக இருந்தார், தமது கோதுமையை களஞ்சியத்தில் சேர்க்கப் போவதாகவும் இருந்தார். கோடரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டி ருந்ததாக நான் அவர்களிடம் கூறினேன். சருகுகள் எல்லா வற்றையும் கொண்டு சென்று, அதைச் சுட்டெரிக்கப் போவ தாக இருந்தார். இதோ அவர் இருக்கிறார், அவ்விதமாக ஒரு வல்லமைமிக்க மகத்தான மனிதராக இருப்பதற்குப் பதிலாக, அவரோ இங்கே சாந்தகுணமுள்ளவராகவும், தாழ்மையுள்ளவ ராகவும் வருகிறாரே. நிச்சயமாக எங்கோ ஏதோ தவறாய் போயிருக்க வேண்டும்” என்று அவன் நினைத்தான், அவன் கூறினான். "எங்கோ ஏதோ தவறுள்ளது என்பதில் எந்த சந்தே கமுமில்லை. அது சரியில்லை என்று அவன் எண்ணினான். நம்மில் அனேகர் கலக்கம் அடைவது போல், அவனும் கலக்கம் அடைந்தான். நடந்து கொண்டிருக்கும் காரியங் களைப் பார்த்து, சரியாக இருக்கிறது என்று நாம் நினைக் கிறவைகள் சரியில்லையே என்று நாம் காணும்போது, நாமும் கலக்கமடையத்தான் செய்கிறோம். சோர்ந்து போய் விடாதீர் கள். அதெல்லாம் சரியாகவே இருக்கும். அங்கே உள்ளே பிசாசு அவனைப் பிடித்திருந்தான். பிசாசு, "இப்பொழுது, நான் இவனைச் சிறைச்சாலையில் வைத்திருக்கிறேன். நான் இவ னைச் சிறையில் போட்டு விட்டேன், எனவே நான் இவனை அங்கே வைத்திருக்கையில், மிக நன்கு கொடூரமான முறை யில் இவனை நடத்துவேன். இப்பொழுது தேவன் இவனைப் பயன்படுத்தவில்லை; நான் இவனைச் சிறையில் வைத்திருக்கி றேன். எனவே என்னால் கூடுமான ஒவ்வொரு வித மூடு திரையையும் இவன் மேல் போடுவேன். நான் இவனை முழுவதும் சிறையில் அடைத்து விட்டேன். நான் கழுகைக் கூண்டுக்குள் வைத்திருக்கிறேன். எனவே இவன் ஒருக்காலும் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதையே அவன் விரும் பாதபடி நான் -நான்-நான் அவனுக்குச் செய்வேன்” என்று நினைத்தான். 32. அவ்விதமாகவே அவன் அநேகருக்கு செய்கிறான். இன்று அனேக நல்ல மனிதர்கள் அந்த அதே தோற்றத்தில் இருக்கிறார்கள். அது முற்றிலும் சரியே. அது சரியாக கிரியை செய்யவில்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது சரியாகத்தான் கிரியை செய்து கொண்டிருக்கிறது. எல்லாமே சரியாக உள்ளது. இங்கே அன்றொரு நாள், ஒரு சிறிய... உள்ளே வருகிற அனேக ஜனங்கள், நல்லது, சகோதரன் பிரன்ஹாம் அவர் களே, எனக்கு.... அதற்காக ஜெபிக்கப்பட்டது. உண்மையில் எனக்கு - எனக்கு - எனக்கு எந்த வித்தியாசமும் ஏற்படவில்லை . நல்லது, அங்கே ஏதோ தவறாயுள்ளது என்று கூறுவதை நான் காண்கிறேன். இல்லை, அங்கே தவறு இல்லை. அந்த ஒழுங்கு முறையில் தவறு ஏதுமில்லை . தேவனிடம் தவறு எதுவும் கிடையாது. வேதாகமத்தோடும் எந்தத் தவறும் இல்லை . பரிசுத்த ஆவியிடம் எந்தத் தவறும் கிடையாது. அதைக் குறித்த காரியம் என்னவென்றால், உங்களிடம் தான் ஏதோ தவறுள்ளது. 33. எல்லாம் சரியாகவே சென்று கொண்டிருந்தது; அது அப்படியே யோவானாகத் தான் இருந்தது. அது மேலும்... அன்றொரு நாள் ஒரு பெண்மணி சீயோன் பட்டணத் திலிருந்து வந்திருந்தாள்; ஒருக்கால் அவள் இப்பொழுது இங்கிருக்கலாம்.... அது ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்பு. அந்தச் சிறு பெண், அவளுடைய சிறு கணவனும், அவர்கள் அழகான ஒரு சிறு ஜோடிகளாக இருந்தார்கள், அவர்கள் என்னுடைய இடத்திற்கு வந்திருந்தார்கள், என்னுடைய நல்ல நண்பர்களில் சிலரோடு வந்திருந்தார்கள், சிம்சஸ், அவர்கள் அங்கே சீயோனிலிருந்து வந்திருந்தார்கள். எனக்குத் தெரிந்த வரையில், இன்றிரவு அவர்கள் எல்லாரும் இங்கே உட்கார்ந் திருக்கலாம். அவளுக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது; அதனுடைய கால் இவ்விதமாக செயலிழந்து போன நிலையில் (hanging up), அது பிறந்திருந்தது என்று நினைக்கிறேன், அதனுடைய காலை கீழே போட முடியாதிருந்தது. அவளோ, "சகோதரன் பிரன்ஹாம் அவர்கள் இந்தக் குழந்தையின் மேல் தம்முடைய கரங்களை வைப்பதை என்னால் காண மாத்திரம் முடியு மானால், அந்தக் கால் கீழே வந்து விடும் (சுகமடைந்து விடும்)" என்றாள். ஏன், அது அணியும்படியாக அதனுடைய செருப்புகளையும் மற்றும் எல்லாவற்றையும் அவள் வீட்டி லிருந்து கொண்டு வந்திருந்தாள். அவள்... அது... ஆம், ஐயா. 34. இந்நிலையில் நான் கூடாரத்தில் ஜெபித்துக் கொண் டிருந்தேன் - அல்லது பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந் தேன், அதன்பிறகு நான் அதை முடித்த போது, நான் வெளியே வேறொரு கூட்டத்திற்கு போகும்படியாக ஒரு வழியை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன் - அல்லது புளூமிங்டன், இல்லினாயிஸிற்குப் போகும்படி ஒரு வழியை உருவாக்க முயன்று கொண்டிருந்தேன். அதன்பிறகு, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், நான் மேடையை விட்டுப்போகத் துவங்கினபோது, நாங்கள் கால் கழுவுதலைச் செய்யப் போவதாக இருந்தோம் என்று நம்புகிறேன். நாங்கள்... நாங்கள் கால்கழுவுதலை விசுவாசிக்கிறோம். வேதாகமம் அதைப் போதிக்கிறது என்று நான் - நான் நம்பு கிறேன். அவர் வரும்வரையில் நாம் அதை நிச்சயமாக செய்தாக வேண்டும். எனவே அவர் கூறியிருக்கிற ஒவ் வொரு வார்த்தையையும் கடைபிடிக்க நாங்கள் முயற்சிக் கிறோம். நாங்கள் இதை எங்களுடைய சபையில் பின்பற்றிக் கொண்டிருந்தோம், நாங்கள் எப்போதுமே அதைக் கொண் டிருக்கிறோம், இப்பொழுது முப்பது வருடங்களாக அதைக் கடைபிடித்து வருகிறோம். நாங்கள் கால்கழுவுவதற்காக உள்ளே போவதாயிருந் தோம், என்னுடைய மகன் மேலே வந்து, அப்பா, அங்கே - அங்கே சீயோனிலிருந்து ஜனங்கள் வந்திருக்கிறார்கள். இன்றிரவு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்படும்படி அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் ஒரு சிறு குழந்தை இருக்கிறது, நீர் எப்பொழுதாவது அந்தக் குழந் தைக்காக ஜெபிப்பீரென்றால், அந்தச் சிறு கால் சுகமாகி விடும் (drop down) என்று அந்தக் பெண் விசுவாசிக்கிறாள். அதற்கு ஒரு மோசமான கால் உள்ளது” என்றான். நான், "அதை இங்கே கொண்டு வா” என்றேன். அவள் சிறிய, அழகான தாயாக இருந்தாள். அவள் மேலே வந்து, "என் குழந்தை தான், சகோதரன் பிரன்ஹாமே. நீர் இந்தக் குழந்தையின் மேல் உமது கரங் களை வைக்கும்போது, அந்தக் கால் நேராகப் போகிறது என்று கணவரும் நானும் விசுவாசிக்கிறோம். அது சரியாகப் போகிறது" என்று கூறினாள். நான், "நான் கர்த்தரிடமிருந்து ஒரு தரிசனத்தைக் காண வேண்டியது உனக்கு தேவையாயிருக்குமா?" என்று கேட்டேன். அவள், "வேண்டாம், ஐயா. வெறுமனே உம்முடைய கரங்களை அவள்மேல் வையும்” என்றாள். நான், "சரி, நான் அதைச் செய்வேன்” என்று கூறி, அதன்மேல் என் கரங்களை வைத்து, அதற்காக ஜெபித்து விட்டு, அறைக்குள் போய் விட்டேன். 35. அடுத்த நாள் நான் வெளியே அலுவலகத்தில் இருந்தேன். நான் அங்கு வெளியே உட்கார்ந்து சில தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டும், அங்கே அலுவலகத்தில் சில வேலைகளைச் செய்து கொண்டும் இருந்தபோது. ஒரு கார் ஓட்டி வரப்பட்டு, அந்தச் சிறு பெண் வெளியே வந்தாள், அவளும் அவளுடைய கணவனும் காரை விட்டு வெளியே வந்தார்கள். இதோ அவர்கள் வருகிறார்கள். அவர்கள், "சகோதரன் பிரன்ஹாமே, ஏதோ தவறாகிப் போய் விட்டது” என்றார்கள் - என்று கூறி னார்கள். நானோ, "ஓ, நீங்கள் என்ன - என்ன சொல்ல வருகிறீர் கள்?” என்றேன். "ஏன்,” அவள், "குழந்தையின் கால் இன்னும் கீழே வரவில்லை (சுகமடையவில்லை )" என்றாள். நான், "நல்லது, அதனோடு செய்வதற்கு என்ன இருக் கிறது?” என்றேன். அவள், "நல்லது, சகோதரன் பிரன்ஹாமே, நான் -நான் - நான் விசுவாசித்தேன். நீர் எப்பொழுதாவது உமது கரங்களை எனது குழந்தையின் மேல் வைப்பீரென்றால், தேவன் அதைச் சுகப்படுத்துவார் என்று விசுவாசித்தேன். நான் அதை விசுவா சித்தேன். எங்கோ ஏதோ தவறாய்ப் போய் விட்டது. ஒருக்கால் அதற்காக நீர் ஒரு தரிசனத்தைக் கொண்டிருந்தால் நலமாக இருந்திருக்கும்” என்றாள். நான், "இல்லை, இல்லை. அங்கே தவறு எதுவுமில்லை, இல்லை , ஒரு காரியமும் தவறாக இல்லை , தவறாயிருக்கும் ஒரே காரியம் நீ தான்" என்றேன். பாருங்கள்? நான், "நீ அதை அப்படியே விசுவாசி” என்றேன். 36. அவள், "சகோதரன் பிரன்ஹாமே, ஒரு காரியத்தை நான் கேட்கிறேன், என்னுடைய குழந்தை முடமாயிருப்பது தான் தேவனுடைய சித்தம் என்று நீர் நினைக்கிறீரா?” என்றாள். நான், "அது தேவனுடைய சித்தம் என்று நான் நம்ப மாட்டேன்” என்றேன். அதற்கு அவள், "நீர் சொல்ல வேண்டுமென்று நான் விரும்பினதெல்லாம் அவ்வளவுதான்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து வெளியே போனாள். சில நாட்களுக்கு முன்பு, அவர்கள் தொலைபேசியில் அழைத்தார்கள். மேலும் இப்பொழுது, குழந்தையின் கால் இயல்பான நிலைக்குத் திரும்பி விட்டது. அது கீழே வந்து விட்டது. அவர்கள்.... பாருங்கள், நாம் அப்படியே கலக்கம் (குழப்பம் அடைந்து விடுகிறோம்; அவ்வளவு தான். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எல்லாமே நேரத் திற்கு ஏற்ப நடந்து கொண்டிருக்கிறது. 37. அவ்வாறு ஜனங்களை விசுவாசிக்க அல்லது அவிசு வாசிக்கும்படி செய்ய பிசாசு முயற்சிக்கிறான் என்பதை நாம் இங்கே கண்டு கொள்கிறோம். எனவே அவர் மேசியாவாக இருந்தார் என்பதை யோவான் அவிசுவாசிக்கும்படி செய்ய பிசாசு முயற்சிக்கிறான். எனவே அவன் தன்னுடைய சீஷர் களில் இரண்டு பேரை ஒன்றாக அழைத்து வந்து, அவர்களை வெளியே அனுப்பி, "இப்பொழுது, நீங்கள் வெளியே சென்று அவர் எங்கு பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தாலும் (அவரைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் அவரைக் கண்டு பிடிக்கும் போது, நீங்கள் வெளியே சென்று, அவரிடம், 'நான் தவறாய் இருக்கிறேனா?' என்று கேளுங்கள்” என்றான். உங்க ளால் அதைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 38. "நான் -நான் தவறாயிருக்கிறேனா? அவர் உண்மையி லேயே அதே ஒருவர் (மேசியா) தானா? அந்த அடையாளம் சரியாக இருந்தது என்று எனக்குத் தெரியும். நான் அந்த மேசியாவின் அடையாளத்தைக் கண்டேன். அது சரி என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனால் –ஆனால் இந்த சாந்த குணமும் தாழ்மையும், மற்றும் இந்த எல்லா காரியங்களும். எனக்கு - எனக்கு அது புரியவில்லை . அது... என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் அதனோடு - அதனோடு ஈடுகொடுத்து சமாளிக்க முடியவில் லையே.” நீங்கள் நிச்சயமாகவே ஈடுகொடுத்து சமாளிக்க வேண்டியதில்லை. என்னால் உங்களிடம் முழு காரியத்தையும் கூற முடிந்து, நீங்கள் அவை எல்லாவற்றையும் அறிந்திருந்து, எனக்கும் அதெல்லாம் தெரிந்திருக்குமானால், அதற்கு மேலும் விசு வாசம் இருந்திருக்காது. என்னால் எதையாவது பூரணமாக விவரிக்கக் கூடுமானால், அதற்கு மேலும் அது விசுவாசமல்ல. விசுவாசத்தினாலே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். விசுவாசத் தினாலே நீங்கள் சுகமடைந்தீர்கள். நீங்கள் வெறுமனே அதை விசுவாசிக்கிறீர்கள். உங்களால் அதை விளக்கிக்கூற முடியாது. நீங்கள் அப்படியே அதை விசுவாசிக்கிறீர்கள். 39. எனவே அவன், "நீங்கள் போய், யோவானிடம் கேளுங்கள், அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்க வேண்டுமா என்று அவரிடம் (இயேசுவிடம் கேளுங்கள். என்னுடைய.... எனக்கு விசுவாசமும் நம்பிக்கையும் உண்டு, மேலும் என்னுடைய - என்னுடைய... நான் அவர்மேல் அந்த மேசியாவின் அடையாளத்தைக் கண்டேன். நான் தவறாக இருந்திருக்கிறேனா? நான் குழம்பிப் போயிருக்கிறேனா? இப்பொழுது, ஏதோ தவறாகப் போய் விட்டதா?” என்றான். இப்பொழுது, இந்த சீஷர்கள் இம்மகத்தான தீர்க்கதரிசி யின் செய்தியோடு இயேசுவிடம் வந்த போது, இயேசு ஒருபோதும் அவர்களிடம், "இப்பொழுது, நான் என்ன செய் வேன் என்று உங்களிடம் கூறுகிறேன், 'சிறைச்சாலையில் சந்தோஷமாக இருப்பது எப்படி' என்கிற சில புத்தகங்களை (literature) யோவானிடம் கொடுக்கும்படி நான் அவைகளை உங்களுக்கு திரும்ப அனுப்பி வைக்கிறேன்" என்று கூறவில்லை . இல்லை . அவர் - அவர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை . அவர் - அவர், "நான் -நான் - நான் பொறுமையைப் பற்றிய ஒரு புத்தகத்தை உங்களிடம் கொடுக்கிறேன். யோவான், தான் சிறைச்சாலையில் இருக்கையில் எப்படி பொறுமையாய் இருப்பது என்பதை நீங்கள் யோவானிடம் கூறுங்கள். அது ஒரு - அது ஒரு நல்ல காரியமாக இருக்கிறது. அவன் சிறைச்சாலையில் இருக்கிறான், அவன் சிறையில் இருப்பதைக் காண்பதை நான் வெறுக்கிறேன், ஆனால் எவ்வாறு - எவ்வாறு சந்தோஷமாக இருப்பது, நல்லது, எவ்வாறு அதைச் செய்வது என்று நான் அவனிடம் கூறுவேன்” என்று சொல்லவில்லை. 40. இல்லை, அவன் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை. அவர் என்ன கூறினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர், "இந்தப் பிற்பகல் கூட்டம் மட்டுமாக சற்றே தங்கியிருங்கள். அப்படியே தங்கியிருங்கள். அதன்பிறகு நீங்கள் புறப்பட்டுப் போகலாம். அப்படியே இந்தப் பிற்பகல் கூட்டத்தைக் கவனித்துப் பாருங்கள்” என்றார். இயேசு அந்தக் கூட்டத்தைக் கொண்டிருந்த பிறகு, யோவானுடைய அந்த சீஷர்கள் அங்கே உட்கார்ந்திருந்து, அவர் அசைந்த ஒவ் வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருக்கிறதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஏனென்றால் அந்த மேசியா எப்படிப்பட்டவராக இருந்தார் என்று யோவான் அவர் களுக்குப் போதித்திருந்தான், மேலும், அது என்னவாக இருந் தது என்று அவர்களிடம் கூறியிருந்தான், மேலும் இவர்கள் அவனுடைய சீஷர்களாக இருந்தார்கள். என்ன சம்பவித் திருந்தது என்பதை அவர்கள் காணத் தொடங்கினார்கள். எனவே ஆராதனை முடிந்த பிறகு, அந்த இரண்டு சீஷர்களும் யோவானைச் சந்திக்கத் திரும்பிப் போனபோது, அவர், "முடவர்கள் நடக்கிறார்கள் என்றும், குருடர்கள் காண்கிறார்கள் என்றும், செவிடர்கள் கேட்கிறார்கள் என்றும், கூட்டத்திற்கு வருகிறவர்கள் எல்லாரும் ஏழைகள் என்றும், நீங்கள் போய் யோவானிடம் சொல்லுங்கள். எல்லாம்... தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. மேலும் sell - பயப்பட வேண்டாமென்றும், எதையும் வித்தியாசமாக நினைக்க வேண்டாமென்றும் யோவானிடம் சொல்லுங்கள்; நான் முந்தவும் இல்லை, பிந்தவும் இல்லை, சரியாகத் திட்டமிடப்பட்ட நேரத்திலேயே இருக்கிறேன். எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே சரியாக இருக்கின்றன. நான் சரியாக திட்டமிடப்பட்ட நேரத்திலேயே இருக்கிறேன். நீங்கள் போய், அங்கே ஒரு சுகமளிக்கிற ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது என்று அவனிடம் சொல்லுங்கள். தரித்திரருக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப் படுகிறது, தேவனுடைய வல்லமை அவர்கள் மத்தியில் அசை வாடிக் கொண்டிருக்கிறது. நான் சரியாக எதிர்பார்க்கப்பட்ட நேரத்திலேயே இருக்கிறேன். வேறு எதற்கும் எந்தக் கவன மும் செலுத்த வேண்டாம். நான் சரியான நேரத்தில் தான் இருக்கிறேன்” என்றார். 41. ஓ, என்னே . "என்னிடத்தில் இடறலடையாதிருக் கிறவன் பாக்கியவான்." இப்பொழுது, இடறல் அடையாதீர்கள். பூமியில் எப்பொழுதும் ஜீவித்த மற்ற எந்த நபரைக் காட்டி லும் இயேசுவனிடத்தில் தான் அதிகமான ஜனங்கள் இடற லடைந்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் மிக சீக்கிரமாக இடறல் அடைந்து விடுகிறார்கள். இப்பொழுது, மறந்து போய், தவறவிட்டு விட்ட இந்த மலைப்பிரசங்கத்தில், இயேசு, அங்கே அதிவிரைவாக நழுவி சென்று விட்டார், எனவே நம்மால் இன்றிரவு அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏன், அவர், "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான். என்னிடத்தில் இடறலடையாதீர்கள். என்ன சம்பவித்தாலும் காரியமில்லை, நான்..... எல்லாமே திட்டமிட்டபடி சரியாக நடந்து கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் அப் படியே - அப்படியே தொடர்ந்து சென்று அதை விசுவா சியுங்கள்; அவ்வளவு தான். எல்லாமே சரியாக இருக்கின்றன. அப்படியே தொடர்ந்து சென்று, அதை விசுவாசியுங்கள்” என்றார். இயேசு அதற்காக அங்கே யோவானைக் கடிந்து கொள்ளவில்லை என்று உங்களுக்குத் தெரியும். அவர், நல்லது, என்னுடைய அப்போஸ்தலனைக் குறித்து நான் வெட்கப்படுகிறேன். நான் என்னுடைய தீர்க்கதரியைக் குறித்து வெட்கப்படுகிறேன்" என்று கூறவில்லை. இல்லை, அவர் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை . அவர், "இதைக் குறித்து உலகம் என்ன சொல்லப் போகிறது, நீ பிரசங்கிக்க வந்த பொழுது, ஓ அப்படிப்பட்ட மகத்தான ஒரு மேசியா, அத்தகைய மகத்தான ஒரு மேசியா, அதற்குப் பிறகோ நான் மேசியாவா என்று கேட்பதற்கு நீ ஆளனுப்புகிறாய் என்று கூறவில்லை. அவர் ஒருபோதும் அவனைக் கடிந்து கொள்ள வில்லை . 42. ஆனால் யோவான் இயேசுவிடம் கூறக்கூடிய திலேயே மிக மோசமான காரியத்தை அவன் கூறின போது, இயேசுவோ யோவான் தன்னைக் குறித்து எப்பொழுதும் பேசினதிலேயே மிகச்சிறந்த காரியத்தைக் கூறினார். ஆமாம். இயேசு.... யோவான், அவர் தான் அந்த ஒருவரா என்று போய் பாருங்கள்” என்று கூறினான். அவர்கள் அங்கிருந்து கடந்து சென்ற பிறகு, இயேசு அவர்களிடம் கூறினார்... யோவானுடைய சீஷர்கள் அங்கிருந்து சென்ற பிறகு அவர் கூறினார், அவர், "எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர் கள்? அருமையாக வஸ்திரம் தரித்த ஒரு மனிதனைக் காணவா போனீர்கள்...” என்றார். இல்லை. அவன் அதற்காக ஹாலிவுட்டிலிருந்து மிக தூரமாக இருந்தான். எனவே அவர், அருமையாக வஸ்திரம் தரித்த ஒரு மனிதனைக் காணவா நீங்கள் போனீர்கள்? அவர்கள் இராஜாக்களின் அரண்மனைகளில் இருக்கிறார்கள். எந்த ஸ்தாபனமும் அது விரும்புகிற எந்தவிதமாகவும் வீசியடித்துக் கொண்டு போகக்கூடிய நாணலையா பார்க்கப் போனீர்கள்?” என்றார். ஓ, இல்லை . நிச்சயமாக அவன் அப்படிப்பட்டவ னல்ல. அப்படியானால் எதைப் பார்க்கப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியையா? ஆம். ஒரு தீர்க்கதரிசியைப் பார்க்கவே நீங்கள் போனீர்கள். ஒரு பெரியவன்.... அவன் தீர்க்க தரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன். இவன் தான் அந்த எலியா. 'என் தூதனை எனக்கு முன்பாக அனுப்பு கிறேன்' என்று தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டவன் இவன் தான். ஸ்திரீயினிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நான னைப் போல பெரியவன் ஒருக்காலும் இருந்ததில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். 43. அவர் ஒருக்காலும் அவனைக் கண்டிக்கவில்லை . அவன் எலியாவின் ஆவியினாலே அபிஷேகம் பண்ணப் பட்டிருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார். அந்த ஆவி அவன்மேல் இருந்தது. அதுதான் அதைச் செய்தது. எல்லாம் சரியாகவே போய்க் கொண்டிருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார், எல்லாமே திட்டமிட்டபடி போய்க் கொண் டிருந்தது. யோவான். ஏன், ஏன் அவன் தீர்க்கதரிசிகள் எல்லாரைப் பார்க்கிலும் - பார்க்கிலும் பெரியவனாயிருந்தான்? இப்பொழுது, நீங்கள் ஆவிக்குரியவர்களாக இருந்தால், நீங்கள் ஏதோவொன்றைப் பிடித்துக்கொள்வீர்கள். அவன் ஏன் மிகப்பெரியவனாக இருந்தான்? மற்ற தீர்க்கதரிசிகள் எல்லா ரும் மேசியாவைக் குறித்து உரைத்திருந்தார்கள். ஆனால் யோவானோ அவரை அறிமுகப்படுத்தினான். அவரை அறி முகம் செய்து வைத்த ஒருவன் அவன் தான். கடைசி காலத்திலும் அது அவ்விதமாகவே இருக்கும். எல்லாமே கால அட்டவணையின்படி போய்க் கொண்டிருக் கிறது. இடறல் அடையாதீர்கள். அப்படியே விசுவாசியுங்கள். இன்று சபைகள் அவரிடத்தில் இடறல் அடைகின்றன. சபைகள் இடறலடைகின்றன. ஜனங்கள் இடறலடைகிறார்கள். அவர்கள் எல்லாரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். என்ன சிந்திப்பது என்றே அவர்களுக்குத் தெரிவதில்லை. 'மனோ தத்துவ முறையினால் மற்றவரின் சிந்தைகளை அறிந்துகொள் ளுதல் (mental telepathy.)" வேறு ஏதோவொன்று மற்றும் எல்லாமும்... வேண்டாம், இடறலடைய வேண்டாம். 44. சென்ற ஞாயிறு நம்முடைய செய்தியானது ஆபிரகா முக்கும் அவனுக்குப் பிறகு அவனுடைய சந்ததிக்கும் தேவன் என்ன செய்தார் என்பதை உங்களுக்குக் காண்பிக்க முயற் சித்துக் கொண்டிருந்தது. அவர் ஆபிரகாமைக் கொண்டு சென்ற ஒவ்வொரு சந்திப்பிலும், அவர் அவனுடைய சந்ததி யையும் கொண்டு சென்றார் என்பதை நாம் கண்டுகொண் டோம். நீதிமானாக்கப்படுதலின் மூலமாகவும், பரிசுத்தமாக்கப் படுதலின் மூலமாகவும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாகவும், ஒரு குமாரனை ஸ்தானத்தில் பொருத்துதலின் மூலமாகவும், அதன்பிறகு தேவன் மனித மாம்சத்தில் வந்து, சாராளுடைய கூடாரத்துக்கு தம்முடைய முதுகைத் திருப்பிக் கொண்டு, அவள் தன்னுடைய இருதயத்தில் என்ன சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்பதைக் கூறினார். பயப்பட வேண்டாம். அவர் சரியாக எதிர்பார்க்கப்பட்ட நேரத்திலேயே இருக்கிறார். அவர் இங்கேயிருக்கிறார். அவரி டத்தில் இடறலடைய வேண்டாம். என்னிடத்தில் இடறலடை யாதிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்." இன்றிரவு பேசும்படி யாக அவர் இங்கேயிருந்திருந்தால், அவர் அதே காரியத் தையே சொல்லியிருப்பார். அவர் தாமதமாகவோ அல்லது குறித்த காலத்திற்கு முன்பே இருக்காமல் சரியாக எதிர்பார்க் கப்பட்ட நேரத்திலேயே இருக்கிறார். பகலுமல்லாமல் இரவுமல் லாமல் இருக்கும் ஒரு நேரம் அங்கே இருக்கும் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான், ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும். அவர் சரியாக எதிர்பார்க்கப்பட்ட நேரத் திலேயே இருக்கிறார். 45. அவர் நீதிமானாக்கப்படுதலின் வழியாகவும், அது தான் லூத்தரின் காலம், பரிசுத்தமாக்கப்படுதலின் வழியாகவும், அதுதான் வெஸ்லியின் காலம், பெந்தெகோஸ்தே காலத்தின் வழியாகவும் வந்து, சபைக்குள் தம்முடைய வரங்களை வைத்து விட்டார், இப்பொழுதோ, அவர் செய்வார் என்று இயேசு சொன்னபடியே, நம்முடைய மாம்சத்தில் நம்மிடம் தோன்றியுள்ளார். அவரைப் பார்த்து இடறலடைய வேண்டாம். அவர் சரியான நேரத்தில் இருக்கிறார். "யோவானே, அந்தச் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்துவிடு." அதை விசுவாசிக்காத அந்த ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்து விடு. விலங்கு சங்கிலிகளை உங்கள் கண்களை விட்டு திரும்ப இழுத்து அகற்றி விடுங்கள். நீங்கள் அதை விசுவாசிப்பீர்களானால், நீங்கள் ஒரு விடுதலையான மனித னாக இருக்கிறீர்கள். அவர் சரியான நேரத்தில் இருக்கிறார். சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்.” ஆமென். சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக் கின்றன. அவர் என்னவாக இருக்கிறார்? அவர் அதே இயேசுவாக இருக்கிறார். கிழக்கில் உதிக்கிற அதே சூரியன் தான் மேற்கில் மறைகிறது. கிழக்கத்திய ஜனங்கள் மேல் உதித்த தேவ குமாரன். அவர் மேசியாவென்று சமாரியர் களிடமும் யூதர்களிடமும் நிரூபித்துக் காட்டும்படி அவர் என்ன செய்தார்? மோசே உரைத்திருந்த தீர்க்கதரிசி அவர் தான் என்று அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண் பித்ததின் மூலமாக. 46. அந்த சமாரிய ஸ்திரீ அதே காரியத்தை சாட்சி பகர்ந்து, "மேசியா வரும்போது, இவைகளை எங்களிடம் கூறுவார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் நீர் யார்?” என்று கூறினாள். அவர், "நான் தான் அவர்” என்றார். உடனே அவள் பட்டணத்திற்குள் ஓடி, "இவர் அதே மேசியா அல்லவா? அது என்னவென்று - என்னிடமுள்ள தவறு என்னவென்றும், நான் என்ன செய்து கொண் டிருக்கிறேன் என்றும் அம்மனிதர் என்னிடம் கூறினார். அவர் மேசியா அல்லவா?” என்று கூறினாள். ஜனங்களும் அதை விசுவாசித்தார்கள். அவர் அதை சமாரியர்களிடமும் யூதர்க ளிடமும் செய்தார், ஆனால் புறஜாதிகளிடம் அல்ல. சுவிசேஷம் புஜாதிகளுக்கு போகும் முன்பதாகவே, அவர் ஏற்கனவே மகிமையடைந்து, மகிமைக்குள் போய் விட்டார்). ஆனால் சாயங்காலத்தில் வெளிச்சமுண்டாகும்.” சபை என்ன செய்தது? அது தூரமாக கத்தோலிக்கத்துக்குள் போய், ஒரு சபையை ஸ்தாபித்தது. அதன்பிறகு வித்திற்காக, நீதிமானாக்கப்படுதலுக்காக வெளியே இழுத்தார். பிறகு வெஸ்லி லூத்தருடையதிலிருந்து வந்தார், அதுதான் பரிசுத்த மாக்கப்படுதல். அதன்பிறகு பெந்தெகோஸ்தேகாரர்கள், அவர் களும் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர், தொடர்ந்து வழி வழியாக அவர்களுடைய முறைமைகளில் இருந்தார்கள். (அப்படியே கீழே தொடர்ந்து வந்து இப்பொழுது நாம் கடைசி நாட்களில் வந்து விட்டோம். அது என்னவாக இருக்கிறது? 47. ஆனால் சாயங்காலத்தில், வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட குமாரனைப் பெற்றுக்கொள்ளும்படி, சாராள் மற்றும் ஆபிரகாமுடைய சரீரம் மாற்றப்படுவதற்கு முன்பு, அவர் வந்து, அவர்களோடு அமர்ந்து, அவர்களோடு உரையாடி, அவர்களுக்கு முன்பாக ஒரு அடையாளத்தைச் செய்தார். இயேசு அதைக் குறிப்பிட்டார். நாம் பின்னால் இருக்க வில்லை. லூத்தர் என்ன சொன்னார் என்பதையோ, வெஸ்லி என்ன சொன்னார் என்பதையோ பின்னோக்கிப் பார்க்க வேண்டாம். இயேசு என்ன சொன்னார் என்பதையும், நாமி ருக்கும் இடத்திலுள்ள இந்த அடையாளத்தையே நோக்கிப் பாருங்கள். வேறு யாரோ என்ன சொன்னார் என்பதைப் பின் னோக்கிப் பார்க்க வேண்டாம்; அவர் என்ன சொன்னார் என்பதையே நோக்கிப் பாருங்கள். அதைச் சொன்ன ஒருவர் அவர் தான். கிழக்கில் உதிக்கும் அதே சூரியன் தான் மேற்கில் மறைகிறது. அங்கே ஒரு இருளார்ந்த நாள் இருந்திருக்கிறது. நிச்சயமாகவே அது அவ்வாறு இருந்திருக் கிறது, சபைகளை எவ்வாறு சேர்ந்து கொள்வது என்பதைக் காணவும், ஸ்தாபனங்களையும் மற்றவைகளையும் எவ்வாறு உருவாக்குவது என்று காணவும் போதுமான வெளிச்சம் இருந்திருக்கிறது. ஆனால் அந்த உண்மையான வல்லமையும், தேவனுடைய பிரசன்னத்தின் வெளிப்பாடுகளும் (manifestations) அநேக அநேக வருடங்களாக கண்டிருக்கவேயில்லை. நாம் அதை உணர்ந்திருக்கிறோம், அது இங்கே இருந்தது என்பதை நாம் அறிந்து கொண்டோம். அதனோடு கூட வரங்களும் கிரியை செய்வதை நாம் கண்டோம். ஆனால் உயரே அந்த எஜமானருடைய வஸ்திரத்தின் ஓரத்தை அடைந்து, அதைத் தொடும்படியாக, தமது சபையில் வல்லமையோடு கூட காணக்கூடிய விதத்தில் அவர் நம் மத்தியில் வருவதை நாம் காணும்போது, தமது வல்லமையை இங்கே கீழே திரும்பவும் கொண்டு வந்து, இங்கே அவருடைய ஜனங்களினூடாகப் பேசி, வெளிப்படுத்தி, "தேவன் நம்மோடு" என்றபடியாக அவரை தேவனாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. ஓ, ஆமாம். யோவானே, இன்றிரவு அந்தச் சிறைச்சாலையின் கதவுகளை தேவன் திறந்து, உன்னை வெளியே விடட்டும். "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் பாக்கியவான்," மற்றவர்களின் மனதிலுள்ளவைகளை வாசிக்கும் ஒன்றோ, அல்லது அது மனதிலுள்ளவைகளை அறியும் ஒரு கலையோ (telepathy) அல்ல, ஆனால் அது சீக்கிரத்தில் வருகிற உயிர்த்தெழுந்த கிறிஸ்துவினுடைய வல்லமையாக உள்ளது. நாம் ஜெபம் செய்வோம். 48. அன்புள்ள தேவனே, சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்க, அது அனேகருடைய கண்களை எரிச்சலூட்டுகிறது. ஆனால் மற்றவர்களோ உள்ளே நடந்து வரும்படியாக அதை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். தேவனே, இன்றிரவு நீர் இந்த சாயங்கால ஜனங்களுக்கு மறுபடியுமாக சாயங்கால வெளிச்சங்களை நீர் அருள வேண் டுமென்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தாமே உம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைக் காண்பார்களாக, நீர் உமக்குத்தானே, "நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள்” என்று சொல்லியிருக்கிறீர். நீர் செய்த கிரியைகள் என்னவென்று நாங்கள் வியப்படைகிறோம். அதன்பிறகு யோவான் 5வது அதிகாரம் 19வது வசனத்தில், நீர், "பிதா அதை முதலாவது செய்வதை நான் காணும் வரையில், நான் எதையும் செய்வதில்லை" என்று சொல்லியிருக்கிறீர் என்பதை நாங்கள் கண்டுகொள்கிறோம். அப்படியானால் நீர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். அது உண்மை என்று நாங்கள் அறிவோம். இப்பொழுது, மறுபடியுமாக, கர்த்தாவே, அதன்பிறகு அது முடிகிறது. இன்று சிறைச்சாலையில் பூட்டப்பட்டிருக்கிற அனேக யோவான்கள் தாமே, அருமையான மனிதர்களும் ஸ்திரீகளும் தாமே, அவர்கள் உம்மை தங்கள் இரட்சகராக அறிந்திருந்தும், அவர்கள் வியந்து கொண்டே இருந்திருக் கிறார்கள், ஓ தேவனே, நீர் சரியாகத் திட்டமிட்ட நேரத் திலேயே இருக்கிறீர் என்பதை அவர்கள் தாமே காண்பார் களாக. நீர் சரியான நேரத்தில் இருக்கிறீர். இதை அருளும், நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 49. இப்பொழுது, நாம் நம்முடைய பீட அழைப்பைக் கொண்டிருப்பதற்கு சற்று முன்பு, நான் இன்றிரவு சற்று தாமதமாக இருந்தேன், கடந்த இரவு நான் பிரசங்கித்ததை எண்ணிப்பார்த்தேன்.... நான் நிச்சயமாக இன்றிரவு அதைச் செய்தேன் என்று பில்லியிடம் கூறப்போகிறேன். என்னால் ஒன்றரை மணி நேரத்திற்கும் குறைவாக பிரசங்கம் பண்ண முடியாதிருக்கிறது என்று அவன் என்னிடம் கூறினான். ஆனால் நான் கர்த்தருடைய உதவியினாலே, அந்நேரத்தில் அதைக் கூற நிச்சயமுடையவனாயிருக்கிறேன். இப்பொழுது, நேற்று அல்லது... ஜெப அட்டைகளை விநியோகித்திருக்கிறோம் என்று நம்புகிறேன். அவன் இன்று ஏதாவது விநியோகித்திருக்கிறானா? அல்லது..... அந்த ஜெப அட்டைகள் என்னவாக இருந்தன? ஒன்றிலிருந்து நூறு வரையில், அவன் நேற்று விநியோகித்திருக்கிறான் என்று நம்புகிறேன், இல்லையா? அது என்னவாக இருந்தது? A களா? A அட்டைகள். சரி. நாம் எங்கிருந்து துவங்கினோம்? நாம் சென்றோம்... நேற்று நாம் ஒன்றிலிருந்து துவங்கினோம், இல்லையா? ஒன்றா? நல்லது, நாம் அவைகளின் பின்னா லிருந்து துவங்கலாம். நாம்.... ஐ எடுத்துக்கொள்வோம். நாம் துவங்கி, ஏறக்குறைய ஒருசிலரை இங்கே மேலே பெற்றுக் கொள்வோம், ஏனென்றால் நம்முடைய நேரம்... நாம் எண்பதி லிருந்து துவங்கலாம்..... 50. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) இதற்கு முன்பு கூட்டங்கள் ஒன்றிலும் ஒருபோதும் இருந்திராதவர்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அப்படியே அதோ பாருங்கள், கூட்டத்தில் பாதி பேர். இயேசு கிறிஸ்து..... இயேசு கிறிஸ்து ஏற்கனவே வியாதியஸ்தரைச் சுகப்படுத்தி விட்டார் என்றும் ஏற்கனவே இழக்கப்பட்டவர்களை இரட்சித்து விட்டார் என்றும் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? இப்பொழுது, அவரால் உங்களை இரட்சிக்கவோ அல்லது உங்களை சுகப்படுத்தவோ முடியாதிருந்தது. அவர் அதை ஏற்கனவே செய்து விட்டதாகவும் நீங்கள் அதை விசுவாசித்தாக வேண்டும் என்றும் அவர் உங்களிடம் கூறி யிருப்பார். ஆனால் அவர் செய்த கிரியைகளை நாமும் கூட செய்வோம் என்று குறிப்பாக இந்த சாயங்கால நேரத்தில் செய்வோம் என்றும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக் கிறார். எத்தனை பேருக்கு அது தெரியும், அது சத்தியம் என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? அது, அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்” என்று கூறுகிறதா? அவர் நிச்சயமாகவே நேற் றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். சரி. அவர் அவ்வாறு இருப்பாரானால், அவர் அவ்விதமாகவே நடந்து கொள்வாராக. 51. இப்பொழுது, ஜெப வரிசையில் எனக்கு அந்நியராக அங்கே நின்று கொண்டிருக்கிற நீங்கள் எல்லாரும் உங்க ளைக் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்று அறிந்தி ருப்பவர்கள் உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், அறிந் திருக்கிற எல்லாரும். அவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு இருக்கிறார்கள். சரி, அங்கே வெளியில், ஒரு ஜெப அட்டையும் கிடைத்திராமல் இருந்தும், சுகமடைய விரும்புகிறவர்களாகிய ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும், உங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிந்திருக்கிறவர்கள் உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், ஜனங்கள் எல்லாருமே. உங்களைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அறிந்திருக்கிற கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு நபரும், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள், எல்லாவிடங் களிலும் எனக்குத் தெரியும் என்று என்னால் காணக்கூடிய ஒரு நபராவது அங்கே இருக்கிறார்கள் என்று நான் நினைக்க வில்லை... நான் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், இவர் ஆர்கன்ஸாஸிலிருந்து வந்து, சரியாக இங்கே அமர்ந் திருக்கும் ஒரு பிரசங்கியார் என்று நம்புகிறேன். இந்த வெளிச் சங்கள், நீங்கள் பாருங்கள், என்னால் - என்னால் அவரை மிக நன்றாகக் காண முடியவில்லை, ஆனால் அவர் ஆர்கன் ஸாஸிலிருந்து வந்திருக்கும் ஒரு பிரசங்கியார் என்று நினைக்கிறேன். 52. ஒருமுறை அங்கே ஒரு பெண்மணி ஜெப வரிசையில் வந்தாள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அங்கே ..... க்குள் வந்த ஒரு சீமாட்டி இருந்தாள். அவள் தன்னுடைய இருதயத்தில், என்னால் மாத்திரம் அந்த மனிதருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட முடியுமானால், நான் சுகமடைந்து விடுவேன் என்று கூறினாள். அவள் ஒரு உதிரப்போக்கைக் (blood issue) கொண்டிருந்தாள். உங்க ளுக்கு அது ஞாபகம் இருக்கிறதா? அவள் அந்தக் கூட்டத் தின் வழியாக நழுவிச் சென்று, அவள் தொட்டாள், ஏறக் குறைய அவ்விதமாக. இப்பொழுது, நீங்கள் அதை ஒரு போதும் உணர்ந்திருக்கவே மாட்டீர்கள். டாமி ஆஸ்பார்ன் அவர்களே, பாலஸ்தீனியருடைய அடியிலுள்ள வஸ்திரம் நீண்ட பெரிய அங்கியாக இருக்கும் என்று உமக்கும் தெரியும், அவர்கள் wrote- ஒருவித தூசியோடு தான் அடியிலுள்ள வஸ்திரத்தை அணிந்திருப்பார்கள், சாலை தான் அந்த தூசியை அவர்கள் மேல் கொண்டு வருகிறது. இப்பொழுது, அவள் அந்த வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டுவிட்டு, வெளியே கூட்டத்திற்குள் திரும்பிப்போய் விட, இயேசு, "என்னைத் தொட்டது யார்?” என்று கூறி யிருப்பாரானால். இப்பொழுது, அது தேவனுடைய குமாரனாக இருந்தது. என்னைத் தொட்டது யார்?” 53. பேதுரு அவரைக் கடிந்துகொண்டு, "நல்லது, எல்லா ருமே... என்ன... ஏன், உம்மிடத்தில் ஏதோ தவறு இருக்கிறது என்று ஜனங்கள் நினைக்கிறார்கள். அவர்கள்..... ஏன், அவர் கள்... எல்லாருமே உம்மைத் தொடுகிறார்களே. உமக்குத் தெரி யும், 'ஹலோ, ரெவ்ரண்ட், நீர் எப்படியிருக்கிறீர்?' மற்றும் அதைப் போன்றவைகள், உமக்குத் தெரியும், 'ரபீ" என்றான். அவர், ஆனால் நான் பலவீனமானதைக் காண்கிறேன்” என்றார். அந்த வல்லமை என்பது பலம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக. "வல்லமை என்னை விட்டுப் புறப்பட்டது. யாரோ என்னைத் தொட்டிருக்கிறார்கள்." அது எங்கேயிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் மட்டுமாக, அவர் திரும்பி கூட்டத்தினரைத் தொடர்ந்து பார்த்தவண்ணம் இருந்தார். அவளுடைய உதிரப்போக்கு நின்றுவிட்டது என்பதைக் குறித்து அவர் அவளிடம் சொன்னார் - கூறினார், ஏனென் றால் அவளுடைய விசுவாசம் அவளை இரட்சித்திருந்தது. அது சத்தியம் தானா? நல்லது இப்பொழுது, அவர் இன்றிரவு (இந்தக் காலையில், நாம் புசித்தோமே, ஊழியக்கார சகோ தரர்களே.... 54. இங்கேயிருக்கும் இந்த சகோதரன், ஒரு பாப்டிஸ்டு பள்ளியில் அவர் பெற்ற எல்லா பட்டங்களையும் குறித்து அவர்கள் பேசிய ஒரு சகோதரன் அவர்தான் என்று நம்பு கிறேன், அவர் டாக்டர் பட்டம் மற்றும் Ph.D. பட்டத்தையும் பெற்றிருந்தார். அவை எல்லாம் என்னவென்று எனக்குத் தெரியாது. அவர் எங்களிடம் அதைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கிறிஸ்துவை அறிந்து கொள்ள பவுலைப் போன்று அவர் அந்த எல்லாவற்றையும் மறக்க வேண்டியதாயிருந்தது. எனவே... அதன்பிறகு.... ஆனால்..... நம்முடைய பலவீனங்களைக் குறித்து பரிதபிப்பதின் மூலமாக, தொடப்படக்கூடிய ஒரு பிரதான ஆசாரியராக அவர் இப்பொழுது இருக்கிறார் என்று வேதவாக்கியம் எபிரெயரில் நமக்குப் போதிக்கிறது. அது சரியே. அது அவ்வாறு இருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நல்லது, அப்படியானால் அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருந்து, நீங்கள் அவரை தொட் டிருந்தீர்களானால், அவர் எவ்வாறு நடந்து கொண்டிருந்திருப் பார்? பாருங்கள்? அவர் அதேவிதமாகவே நடந்து கொண் டிருந்திருப்பார், இல்லையா? "இன்னும் கொஞ்ச காலத்தில் உலகம் என்னைக் காணாது. இருப்பினும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், நான் உங்களோடும், உங்களுக்குள்ளும் கூட, உலகத்தின் முடிவு பரியந்தம் இருப்பேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூட செய்வீர்கள். அது சரிதானா? இது புறஜாதி ஜனங்க ளிடம் வரும் என்றும், லூத்தரின் காலம் வழியாகவோ, வெஸ்லியின் காலம் வழியாகவோ வராது என்றும், ஆனால் கடைசி காலத்தில் அது சம்பவிக்கும் என்றும் அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ளார். இப்பொழுது, நீங்கள் அதைக் காணவில்லையா? அவர் சரியான நேரத்தில் இருக்கிறார். சரியாக.... மேலும், இது உலகத்தைச் சுற்றிலும் போயிருக்கிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். எனவே நாம் முடிவில் இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை, சந்தேகமேயில்லை. ஆனால் நீங்கள் அவருடைய வஸ்திரத்தை தொடுகிறீர்கள். 55. இப்பொழுது, "சகோதரன் பிரன்ஹாமே, அது என்ன?” அது நானல்ல. நீங்கள் அதைச் செய்திராவிட்டால், எனக்கு அது ஒரு காரியத்தையும் செய்திருக்காது. நான் அதற்குள் இருப்பதைப் போலவே அவ்வளவு அதிகமாக அது -அது நீங்களாக இருக்கிறது. அது அவருடைய - அவரைக் தொடுகிற உங்களுடைய விசுவாசமாக இருக்க வேண்டும், அப்பொழுது அவர் என் வழியாகப் பேசுவார். அது அவருக்கு என்னைத்தானே விட்டுக்கொடுக்கும் ஒரு வரமாக இருக்கிறது, நான் அவருக்கு என்னுடைய கண்களையும், என்னுடைய சிந்தையையும், என்னுடைய நாவையும், என்னுடைய ஜீவனையும் கொடுக்கிறேன். உங்க ளில் எவரையும் எனக்கு - எனக்குத் தெரியாது. ஆனால் அது - அது அங்கே அதனூடாகப் பேசிக் கொண்டிருப்பது அவர் தான். பாருங்கள்? அதைச் செய்து கொண்டிருப்பது அவர் தான். எனவே அது நானல்ல. எனவே அதைச் செய்வதற்கு என்ன காரணம்? உங் களை எனக்குத் தெரியாது. நீங்கள், சகோதரன் பிரன்ஹாமே, என்னைக் குறித்து?" என்று கேட்கலாம். எனக்குத் தெரியாது. "என்னைக் குறித்து?” எனக்குத் தெரியாது. ஆனால் அவ ருக்குத் தெரியும், எனவே நீங்கள் அவரைத் தொடுகிறீர்கள், அப்போது அவர் என்னைத் திரும்ப உபயோகிக்கிறார். எனவே பாருங்கள், அது அவருடைய ஊழியக்காரர்களாக, நீங்களும் நானும் ஒன்றாக இருப்பது. அவர் சரியான நேரத்தில் இருக்கிறார் என்று அவர் தம்மை தமது ஜனங் களுக்கு அறியப்பண்ணுகிறார். அவர் சரியாக திட்டமிடப் பட்ட நேரத்திலேயே இருக்கிறார், அப்படியே சரியாக, முடிவுகாலத்திற்கு சற்று முன்பாக, சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கும் போது. 56. இப்பொழுது, அவர் அதைச் செய்வாரானால், எத்தனை பேர் அவரை நேசித்து, அவரை விசுவாசித்து, அவரை ஏற்றுக்கொள்வீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. இப்பொழுது, பரலோகப் பிதாவே, மீதியான மற்றவர் களும் உமது கரங்களில் இருக்கிறார்கள். நான் என்னையும் இந்தக் கூட்டத்தினரையும் உம்மிடம் ஒப்புவிக்கிறேன். வெறும் ஒரு வியாதியஸ்தரைக் கொண்டு அதை நிரூபியும், பிதாவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது சம்பவிக்கட்டும். ஆமென். இப்பொழுது, மிகவும் பயபக்தியாயிருங்கள். மறுபடியும் எழுந்து நிற்காதீர்கள்; அமைதியாக உட்கார்ந்திருங்கள். சற்று நேரம் மிகவும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, ஐம்பது - நூறு வருடங்களில் என்னால் கூற முடிவதைக் காட்டிலும் அவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தை இன்னும் அதிகமான அர்த்தம் உள்ளதாக இருக் கும்: வெறுமனே அவரிடமிருந்து வரும் ஒரு வார்த்தை . 57. இப்பொழுது, எந்த ஜெப அட்டையும் இல்லாமல் அங்கே வெளியிலிருக்கும் நீங்கள், அல்லது நீங்கள் எங்கே யிருந்தாலும். உங்களுடைய நிலை எப்படிப்பட்டதாக இருந்தா லும், நீங்கள், ஓ, மகத்தான பிரதான ஆசாரியரே, நான் உம்மைத் தொடட்டும். சகோதரன் பிரன்ஹாமுக்கு என்னைத் தெரியாது. அப்படியானால் அவர் என்னைத் திரும்பிப் பார்க்கும்படி நீர் செய்து, நான் எதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறேனோ, அதை அவர் என்னிடம் கூற அனுமதியும். என்னிடம் என்ன தவறு இருக்கிறது என்று அவர் என்னிடம் கூறட்டும். அவருக்கு என்னைத் தெரியாது, அல்லது நான் நினைத்துக் கொண்டிருக்கிற ஏதோவொன்றை, அல்லது நான் செய்து கொண்டிருக்கிற ஏதோவொன்றை, அல்லது அது என்னவாக இருந்தாலும், அதை அவர் என்னிடம் கூறட்டும். நான் உம்மை விசுவாசிப்பேன்” என்று கூறுங்கள். ஏனென்றால் அந்த விதமாகத்தான் அவர் செய்வார் என்று வேதாகமம் கூறியுள்ளது. அவர் அவ்விதமாகத்தான் செய்தார். அவ்விதமே அவர் செய்வார். நீங்கள் பாருங்கள், நண்பர்களே, அது ஒருமுறை இயேசுவை பலவீனமாக உணரும்படிக்குச் செய்திருக்குமென்றால், ஒரு பாவியாகிய எனக்கு அது என்ன செய்யும்? அங்கே மேலேயுள்ள வாசலில் நாம் சந்திக்கும் வரையில், விலைக்கிரயம் என்ன - என்ன - என்னவென்று நீங்கள் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டீர்கள். ஆனால் அது.... நான் முறையிடவில்லை . நான் தேவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறேன். உங்க ளுக்குப் புரிகிறதா? அப்பொழுது நீங்கள் புரிந்து கொள் வீர்கள். 58. நல்லது, நாம் இறங்கி வந்து, அவர்கள் ஜெப அட்டைகளை விநியோகிக்கிற நாட்கள், அதன்பிறகு அதோடு கூட சேர்ந்து... அந்த வாரம் முழுவதும் அதனோடு சேர்ந்து அந்த ஜெப அட்டைகளைப் பெற்றுக்கொண்டு, இங்கேயுள்ள சில ஜெப அட்டைகளையோ இங்கேயுள்ள சிலவற்றையோ, இங்கே கீழே உள்ளதையோ தெரிந்து கொள்கிறேன், எனவே அது - எல்லாரும் ஜெப அட்டை எண் 1க்காக வந்து கூடி விடுவார்கள். உங்களுக்குப் புரிகிறதா? எனவே அவர்கள்... அதன்பிறகு பையன், அவன் அவைகளை விநியோகிப்பதற்கு முன்பு, அவன் இறங்கி வந்து, கூட்டத்தினர் முன்பாக நின்று, இந்த அட்டைகளை ஒன்றாகக் கலந்து விடுகிறான், அவைகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கிறான். அவன் அவ்வாறு செய்வதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள் என்று நான் நினைக் கிறேன். சரி. அதன்பிறகு அவன் கீழே சென்று, உங்களுக்கு ஒன்று விருப்பமானால், அவன் உங்களுக்கு ஒன்றைக் கொடுப்பான். அப்போது அந்தப் பையன், "நல்லது இப்பொழுது, நான் அவளுக்கு எண் 1ஐக் கொடுத்தேன்" என்று கூறிவிட முடியாது. அவனுக்கே அது தெரியாது. அவன் அப்படியே அதைக் கொடுக்கிறான். பாருங்கள்? ஒன்றாகக் கலந்து, அதை உங்களுக்குக் கொடுக்கிறான்.... அவன் ஒருக்கால் உங்களுக்கு (எண்) 10ஐயும், உங்களுக்கு அருகிலிருக்கும் அடுத்தவருக்கு 95ஐயும் கொடுக்கலாம். எனவே அப்போது, வாரத்தினூடாக அதன்பேரில் ஏதோவொரு இடத்திலிருந்து, நான் செயலில் கொண்டிருக்கிறேன்... நான் 20லிருந்து 30 வரையோ, அல்லது 50 முதல் 90 வரையோ, அல்லது 90லிருந்து பின்னால் 20 வரையோ, அல்லது அதைப்போன்று ஒன்றோடு ஏதோவொரு இடத்தில், கர்த்தர் அதை என்னுடைய இருதயத்தின் மேல் வைக்கும் எந்த இடத்திலாவது அழைப்பேன், ஏனென்றால் அந்தவிதமாகத்தான், ஏன் அப்போது, அழைக்கும்படி பரிசுத்த ஆவியானவர் வழிநடத்துகிற எந்தவிடமாக இருந்தாலும், அங்கு அழைப்பேன். 59. அந்த வழிநடத்துதலின் மூலமாக, இன்றிரவு இது இருக்கும்படியாக சம்பவித்திருக்கிறது, இந்தப் பெண்மணி ஒரு கறுப்பின பெண்மணியாகவும், நானோ ஒரு வெள்ளை மனிதனாகவும் இருக்கிறேன். நான் உனக்கு அந்நியன் தானா? நாம் ஒருவருக்கொருவர் அறிந்திருக்கவில்லை. இதுவே நம்முடைய முதலாவது தடவை கூட்டமாகும். இப்பொழுது பார்? இப்பொழுது, கிறிஸ்துவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியா னவர் தொடர்ந்து இன்னும் இன்றிரவு நமக்குள் இருப்பா ரானால், அது அதே ஆவியாக இருக்குமானால், அது அதே கிரியையைச் செய்யும். இது உண்மை என்றால், பரிசுத்த ஆவி, அது பரிசுத்த ஆவியின் கிரியைகளையே செய்யும்... அது இயேசுவின் கிரியைகளையே செய்யும். அந்தவிதமாகத்தான் அங்கே அப்போது முற்காலத்தில் அவர் என்னவாக இருந்தார் என்பதை உங்களால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடியும்; அவர் இப்பொழுது என்ன வாக இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே நாம் பரிசுத்த யோவான் 4வது அதிகாரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே ஒரு... அவர் ஒரு யூதராக இருந்த போது, அவர் ஒரு சமாரிய ஸ்திரீயைச் சந்தித்து, அவளு டைய ஆவியைப் பிடித்துக்கொள்ள ஒரு சில நிமிடங்கள் அவளிடம் பேசினார். அதன்பிறகு அவளுடைய தொல்லை எங்கேயிருந்தது என்று அவளிடம் கூறினார். அவள், "ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது, அவர் இவைகளை எங்களுக்குக் கூறுவார் என்பதை நாங்கள் அறிவோம்” என்றாள். 60. அவள் அதை அவரிடம் கூறினாள். அவர், "உன்னுடனே பேசுகிற நானே அவர்" என்றார். உடனே அவள் பட்டணத்திற்குள் ஓடி, நான் செய்தவைகளை என் னிடம் சொன்ன ஒரு மனிதரை வந்து பாருங்கள். இவர் அதே மேசியாவல்லவா?” என்றாள். ஜனங்கள் எல்லாரும் விசுவாசித் தார்கள். எல்லாரும்..... இயேசு இன்னுமொரு நபரிடத்தில் ஒருபோதும் அதைச் செய்யவில்லை. ஆனால் முழு பட்டண மும் அதை விசுவாசித்தது. அவர் ஒருபோதும் யாரையும் சுகப்படுத்தவில்லை, அப்படியே அங்கே சென்று, தம்மை வெளிப்படுத்தினார். அந்த ஸ்திரீயும்... அந்த ஸ்திரீயினுடைய சாட்சியினிமித்தம் அந்த முழு பட்டணமும் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது, அது நேற்றைய இயேசுவாக இருந்து, அவர் வந்து அதே காரியத்தை அவரால் செய்ய முடிந் திருக்குமானால், இங்கே நின்று கொண்டிருக்கும், ஒரு ஆப் பிரிக்க பெண்பிள்ளையும், ஒரு ஆங்கிலோ சாக்ஸன் மனி தரும்... நீங்கள் இங்கே எதற்காக இருக்கிறீர்கள் என்ற ஏதோவொன்றை, நீங்கள் செய்திருக்கிற ஏதோவொன்றை அவரால் எனக்கு வெளிப்படுத்த முடியுமானால். அல்லது அவ்விதமான ஏதோவொன்று, உங்களுக்குத் தெரியும் - அது உண்மையா இல்லையாவென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அப்பொழுது நிச்சயமாக அதை அறிந்திருப்பீர்கள். 61. அப்படியானால், நீங்கள் எதற்காக இங்கே இருக்கி றீர்கள் என்பதை அவரால் உங்களிடம் கூற முடியுமானால், உங்களுக்கு என்னவாகும் என்பதையும் அவரால் நிச்சய மாகவே உங்களிடம் கூற முடியும். நீங்கள் அதை விசு வாசிக்கிறீர்களா? இங்கேயிருக்கும் கறுப்பின ஜனங்கள் எல்லா ரும், வெள்ளையர்களும் கூட, மற்றும் இன்னுமாக நீங்கள் யாராயிருந்தாலும், உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. இப்பொழுது, இது சாத்தியம் என்று ஜனங்களாகிய உங்க ளில் யாராவது விசுவாசியாமல் இருந்து, இது மனோசாஸ்திரம் தான் என்று நம்புவீர்களானால், நான் எந்த Ph.D. பட்டத் தையும் பெற்றிருக்கவில்லை. நீங்கள் இங்கே வந்து நீங்களே அதைச் செய்யுங்கள். நான் உங்களுக்காக காத்திருக்கிறேன். பிறகு நீங்கள் வரப் பயப்படுவீர்களானால், இதை ஏற்றுக் கொள்ளுங்கள், அல்லது அதைக் குறித்து அமைதியாக இருந்து விடுங்கள். புரிகிறதா? நான் அவ்வாறு செய்ய வழிநடத்தப்பட்ட காரணத்தினால் தான் அவ்வாறு கூறினேன். ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது, எனக்கு - எனக்கு அதைக் குறித்து தெரியும். இங்கே ஏதோவொன்று சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை நீங்களும் கூட அறிவீர்கள். உங்களுடைய தொல் லைகளில் ஒன்று நரம்புத்தளர்ச்சி, நீங்கள் உண்மையாகவே மிகவும் பதட்டமாயிருக்கிறீர்கள். 62. அதோ அது வருகிறது, அவர் அதை யூகித்துக் கொண்டார்." நீ எப்பொழுதாவது சரியாகி விடுவாயா? நான், "அங்கே வெளியிலுள்ள யாரோ ஒருவர் நரம்புத்தளர்ச்சி உடையவராயிருக்கிறார். யாரோ ஒருவர்... கர்த்தர் எதையோ கூறினார்" என்று கூற முடியும். ஆனால் அந்த யாரோ ஒருவர் யார்? அந்த யாரோ ஒருவர் இவர் தான். நின்று கொண்டு.... இவர்கள் ஒரு - ஒரு அருமையான ஆவியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் தான் அதுவா என்று நாம் பார்ப்போம். நரம்புத்தளர்ச்சியா? உங்களுக்கு உங்கள் தோள் பட்டையிலும் கூட பிரச்சனை உள்ளது. அது சரிதான். உங்களுக்கு இருதயக் கோளாறு கூட இருக்கிறது. அது சரிதானா? உங்களுடைய இருதயத்தில் ஒரு பாரம் உள்ளது. அது உண்மை தானா? அது ஏறக்குறைய ஒரு பையனாக உள்ளது. உ-ஊ. அவன் ஒரு மருத்துவமனையில் இருக்கி றான்: மருத்துவமனையில். நீங்கள் அவனைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் யாரென்று நான் உங்களிடம் கூற உங்களுக்கு விருப்பமா? செல்வி. ரிச்சட்சன் (Miss Richardson). போய், விசுவாசியுங்கள். 63. அது எனக்கு என்ன செய்கிறது என்று நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். அது இதே ஜீவனை அப்படியே கொன்று விடுகிறது.... இப்பொழுது, ஒவ்வொரு வரும் மிகவும் பயபக்தியாயிருங்கள். ஐயா, எப்படியிருக்கிறீர்கள்? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம் தானே? நாம் அந்நியர்கள் தான். ஆனால் நம் இருவரையுமே இயேசுவுக்குத் தெரியும், நம் இருவரையுமே இயேசு போஷித்து வந்திருக்கிறார். நீர் எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறீர் என்று நான் அறியும்படி தேவன் அனுமதிப்பாரென்றால். எனவே நான் அதிக விவரமாக அதில் போக வேண்டியதில்லை. பாருங்கள், முழு - அங்கே நின்று கொண்டிருக்கிற ஒரு முழு வரிசையே எனக்கு இருக்கிறது, மற்றவர்களோ அங்கே வெளியே ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு என்ன செய் கிறது என்று புரிகிறதா. ஆனால் உம்மைக் குறித்த எதையாகிலும் அவர் என்னிடம் கூறுவாரென்றால், நீர் விசுவாசிப்பீரா? நிச்சயமாக, அந்தக் காரியங்களில் ஒன்று என்னவென்றால், நீர் உம்மு டைய கண்களுக்காக ஜெபிக்கப்பட விரும்புகிறீர். நிச்சயமாக, நீங்கள் மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். யாருமே அதைக் காண முடியும். இந்த மனிதரோடுள்ள காரியம் எல்லாம் அதுவல்ல. அங்கே வேறு ஏதோவொன்று உள்ளது ஏனென்றால் அவர் மரணத்திற்கேதுவான ஒரு நிழலை அவர்மேல் உடையவராயிருக்கிறார். அவருடைய கண்கள் அதைச் செய்யவில்லை. TB, உமக்கு காச நோய் உள்ளது, அதற்காக உமக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது : அதுவோ வெற்றியடையவில்லை. அது செய்யப்பட வேண்டிய விதத்தில் செய்யப்பட்டிருக்க வில்லை . அது சரிதானே? அது சரியாக இருக்கப் போகிறது என்று இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே உங்கள் முழு இருதயத்தோடும் விசுவா சியுங்கள். அவர் தேவ குமாரன் என்றும் அவர் உம்மை சுகமாக்கி விட்டார் என்றும் நீர் விசுவாசிக்கிறீரா? நீர் விசுவாசிப்பீரா? அப்படியானால், அப்படியே, "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறிக்கொண்டே நடந்து செல்லும். அந்த அல்சர் சுகமாகி விடும். 64. உங்களை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக் கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து தேவ குமாரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இக்கடைசி நாட் களில் இந்த வேதவாக்கியத்தைக் காண்பிப்பதற்கு சபைக்கு ஒரு செய்தியாளனாக அவர் என்னை அனுப்பியுள்ளார் என்றும் அவர் ஒரு வரத்தைக் கொடுத்திருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா... அது நான் என்ற காரணத்தினால் அல்ல. அவர் .... பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த காரணத் தினால் அல்ல. அவர் கொண்டிருந்தார்.... அநேகமாக, அவர் வழக்கமாக எதையும் அறிந்திராத யாராவது ஒருவரை தான் பெற்றுக் கொள்கிறார். அதன்பிறகுதான் அவரால் தம்மைத் தாமே காண்பிக்க முடியும். புரிகிறதா? வேதவாக்கியத்தின் மூலமாக நான் பேசுகிற இந்தக் காரியங்கள் சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இவர்கள் மிகவும் துக்கத்தினால் நிறைந்திருப்பதாகத் தோன் றுகிறது, ஆகையால் தான் நான் -நான் ஒரு நிமிடமாக இவர்களிடம் பேசிக் கொண்டேயிருந்தேன். ஆமாம். அது தான் காரணம். முதலாவது காரியம் என்னவென்றால், உங்களுக்காகவே. உங்களுக்கு ஒரு-ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அது பெண்களுக்குரிய, ஸ்திரீகளுக்குரிய ஒரு கோளாறு, உள்ளி லுள்ள ஸ்திரீகளுக்குரிய உறுப்புகள் எல்லாம் சுத்தமாக அகற்றப்பட்டு விட்டன. ஆனால் அது - அது எதிர்பாராத விதமாக விரும்பத்தகாத முடிவுகளை ஏற்படுத்தி விட்டது. அது ஏதோவொன்றைச் செய்து விட்டது. இப்பொழுது, சற்று பொறுங்கள். அது.... மருத்துவர்... அதில் முறிவு ஏற்பட்டது. அதில் முறிவு ஏற்பட்டு, நீங்கள் திரும்பிச் செல்ல வேண் டியிருந்தது, நீங்கள் திரும்பிப் போக வேண்டியிருந்தது. 65. ஆனால் நீங்கள் -நீங்கள்.... உண்மையில் அது உங்களுக்கு துக்கம் இல்லை. உங்களுடைய துக்கம் ஒரு பிள்ளையைப் பற்றியது. அதற்கு - அதற்கு ஏதோவொரு வியா தியோ அல்லது ஏதோ கோளாறோ இருந்தது. அது காசநோய் (TB). இப்பொழுது அதற்கு ஏதோவொரு வித பலவீனமான வலிப்புகள் போன்று இருக்கிறது, அது சரியே. உங்களைத் தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிற வேறொரு காரியமும் உண்டு. அதற்கு காதில் ஒரு பிரச்சனை உள்ளது. அது சரியே. உங்களுடைய பெயர் திருமதி. ஸ்மித். நீங்கள் கர்த்தரை விசுவாசித்தபடியே செல்லுங்கள்...... ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? விசுவாசமுடையவர்களா யிருங்கள். அப்படியே - அப்படியே விசுவாசம் கொண்டிருங் கள். விசுவாசியுங்கள். சீமாட்டியே, எப்படியிருக்கிறீர்கள்? நாம் ஒருவருக் கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். எனக்கு - எனக்கு உங்க ளைத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில், உங்களை என்னுடைய ஜீவியத்தில் நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நாம் இங்கே முதல் தடவையாக சந்திக்கிறோம். என்னால் - என்னால் உங்களுக்காக எதையாவது செய்ய முடிந்தும், நான் அதைச் செய்யாமல் போனால், நான் -நான் ஒரு மோசமான நபராயிருப்பேன்; அப்படியானால் நான் -நான் இங்கே பிரசங்க பீடத்தின் பின்னே ஒரு ஊழியக்காரனாக நின்று கொண் டிருக்க வேண்டியதில்லை. 66. என்னால் - என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது. அவர் தாமே இங்கே நின்று கொண்டிருந்து, அவர் எனக்குக் கொடுத்திருக்கிற இந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டிருப்பார் என்றால், உங்களுக்காக செய்திருக்கிறதைக் கொண்டு அவர் மேசியா என்பதை நிரூபிக்க மாத்திரமே அவரால் செய்ய முடிந்திருக்கும். ஆனால் உங்களுக்காக அவர் அதைச் செய்தார் என்றோ அல்லது நீங்கள் -நீங்கள் எப்படியும் கிரியை செய்வதில்லை என்றும் நீங்கள் விசுவா சத்தைக் கொண்டிருக்க வேண்டும். அது சரி அல்லவா? ஆனால் அவர் இங்கே நின்று கொண்டு, எதையோ உங்களுடைய கோளாறு என்னவென்றோ, அல்லது நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்றோ, நீங்கள் என்ன செய்யா மல் விட்டீர்கள் என்றோ, அல்லது அதைக் குறித்து ஏதோவொன்றையோ உங்களிடம் கூறுவாரானால். அப்படியா னால் அதை விசுவாசிக்க உங்களுக்கு விசுவாசம் உண்டு, இல்லையா? சரி. இப்பொழுது, அது சபையோருடைய விசுவாசத்தை அதிகரிக்கச் செய்யுமா? நீங்கள் எனக்கு தெளிவற்று மங்கலாக (தெரிகிறீர்கள்). நல்லது, உங்களுக்கு ஒரு விபத்து நேரிட்டிருக்கிறது. அது (உங்களுடைய தலையை தொல்லைப்படுத்திக் கொண் டிருக்கிறது. பிறகு உங்களுடைய இடது பக்கத்தில் கோளாறு இருக்கிறது. அது சரியே. சிக்கலான நிலைமைகள், அநேக காரியங்கள் தவறாயுள்ளன... அது உண்மை . ஆமாம், பெரு மாட்டியே. நீங்கள் யாரென்று தேவன் என்னிடம் கூறுவா ரானால், அது உங்களுக்கு உதவி செய்யுமா? செல்வி. டெர்ரி (Miss Terry). தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... இப் பொழுது உங்களுடைய முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 67. அவர் இருதயக் கோளாறைச் சுகப்படுத்துகிறார், இல்லையா? அவர் அவ்வாறு செய்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப்படியே தொடர்ந்து முன்னே சென்று, அன்பு தேவனே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். உங்க ளுக்கு நன்றி...... அவர் கீல்வாதத்தை சுகப்படுத்தி, ஜனங்களைக் குணமாக் குகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. சற்று முன்னே வாருங்கள். இதை உங்களுடைய முழு இருதயத் தோடும் விசுவாசியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. பெண்களுக்குரிய கோளாறும் இருதயக் கோளாறும். அவர் உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? சரி. நீங்கள், உமக்கு நன்றி” என்று கூறிக்கொண்டே உங்கள் பாதையில் களிகூர்ந்தபடி செல்லுங்கள். இளம் வயதிலேயே உங்களுக்கு இரத்த சோகை உள்ளது, ஆனால் அவர் இரத்தத்தை ஊற்றுபவர் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? போய், "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். விசுவாசித்தபடியே செல்லுங்கள். சைனஸ் பிரச்சனை மற்றும் அது... ஓ . அவர் அதைச் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அப் படியே போய், "கர்த்தராகிய இயேசுவே, உமக்கு நன்றி" என்று கூறுங்கள். 68. அந்தக் கட்டிக்காக உமக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும், ஆனால் தேவன் உங்களுக்கு அதைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி. சரி, களிகூர்ந்தபடியே, "கர்த்தாவே, உமக்கு நன்றி" என்று கூறிக் கொண்டே சொல்லிக் கொண்டே உங்கள் பாதையில் தொடர்ந்து செல்லுங்கள். வாருங்கள், சீமாட்டியே, வாருங்கள். அவர் நரம்புத் தளர்ச்சியை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? சரி, "கர்த்தாவே, உமக்கு நன்றி” என்று கூறிக் கொண்டே, உங்கள் பாதையில் களிகூர்ந்தபடியே தொடர்ந்து செல்லுங்கள். மேலும்..... நான் உமக்கு எதையுமே கூறாமலிருந்தால் என்னவா கும்? எப்படியும் நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? இங்கே வாருங்கள். இயேசுவின் நாமத்தில், இவள் சுகமடைவாளாக. விசுவாசித்தபடியே செல்லுங்கள். 69. வாருங்கள். சற்று பொறுங்கள். சற்று பொறுங்கள். எங்கோ ஏதோவொன்று நடந்து விட்டது. அங்கே கடந்து போய்க்கொண்டிருக்கும் அந்த ஜனங்கள் ஜெப வரிசையில் இருந்தார்களா, அங்கே பின்னால் போய்க் கொண்டிருக்கிற வர்கள்? ஓ, ஆமாம். அது என்ன... வாக இருந்திருக்க வேண்டும். இங்கே இந்த வரிசையில் பின்னால் உட்கார்ந்து கொண் டிருக்கிற திருவாளரே, இங்கே என்னைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறவரே, நீர் புரோஸ்டேட் சுரப்பி கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர். ஆம், ஐயா. அங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர் தான், ஆம், ஐயா. ஆமாம். உம்மிடம் ஜெப அட்டை இருக்கிறதா? உம்மிடம் ஒரு ஜெப அட்டையும் இல்லை, அப்படித்தானே? உமக்கு அது தேவை யில்லை. உம்முடைய விசுவாசம் உம்மைச் சுகமாக்கிற்று. அங்கிருந்து இரண்டாவது (இருக்கும்) இந்த பெண்மணி உம்முடைய மனைவி. அது சரியே. நீங்கள் ஒரு வீட்டில் ஒன்றாக இருப்பதை நான் காண்கிறேன். அவள் தன்னுடைய கல்லீரலில் உள்ள கோளாறினால் அவதிப்படுகிறாள். அது சரியே. அது சரி என்றால், உன்னுடைய கரத்தை உயர்த்து. வீட்டிற்குப் போ; இயேசு கிறிஸ்து உன்னைச் சுகமாக்குகிறார். 70. அங்கே உங்களுக்கு அடுத்ததாக அமர்ந்திருக்கும் அந்த சீமாட்டிக்கு, அவர்களுடைய நாக்கில் ஏதோ கோளாறு இருக்கிறது. சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது உண்மை என்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. வீட்டிற்குப் போங்கள். அங்கே வெளியே கடைசியில் உட்கார்ந்து கொண் டிருக்கும் உங்களைக் குறித்து என்ன? இப்பொழுது அதோ அது உங்கள் மேல் இருக்கிறது: உங்களுக்கு சிறுநீர்ப்பை கோளாறு உள்ளது. அது சரியே. சரி. நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? சரி, வீட்டிற்குச் சென்று, சுகமாயிருங்கள். ஆமென். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? அவர் கள் எதைத் தொட்டார்கள்? இதோ - இங்கே ஒரு மனிதன் இருந்து அழத் தொடங்குகிறான், இந்த மனிதன் இங்கே சரியாகப் பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அது அந்த வாலிபன் தான். இப்பொழுது, அந்த மனிதனை என்னுடைய ஜீவியத்தில் ஒருபோதும் நான் கண்டதேயில்லை. ஆனால், மகனே, கவனி, உனக்கு வயிற்றுக் கோளாறு உள்ளது. அது சரியே. ஆனால் நீ ஜெபித்துக் கொண்டிருந்த போது, ஆவியானவர் உன்மேல் வந்தார், அது மிகவும் அற்புதமான ஒரு உணர்ச்சியாக இருந்தது. 71. நான் உனக்கு ஒரு அந்நியனாயிருந்தால், உன் கரத்தை இவ்விதமாக அசைத்துக் காட்டு. எனக்கு உன்னைத் தெரியாது. உனக்குள்ள கோளாறு என்ன? உன்னுடைய கரத்தை அசைத்துக் காட்டு. சரி, நீ சுகமடைந்து விட்டாய். இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார். அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த சீமாட்டி காக்கை வலிப்பினால் அவதிப்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா, அவர் உங்களைச் சுகப்படுத் துவார்? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் உங்க ளுடைய சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களானால், மயக்கமடைந்து சுயநினைவை இழக்கிற காரியங்கள் உன்னை விட்டுப் போய் விடும், இனி அது உனக்கு வராது. அதை விசுவாசி. இங்கே என்னை பார்த்தபடி உட்கார்ந்து கொண்டு, இவ்விதமாக தன்னுடைய கரத்தை மேலே உயர்த்தினபடி, அந்த பக்கத்திலிருக்கும் இந்தச் சிறு சீமாட்டி, அவர்களுடைய கணுக்காலில் ஏதோ கோளாறு உள்ளது. தேவன் உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, உங்களால் உங்கள் சுகத்தைக் கொண்டிருக்க முடியும். 72. இந்த சீமாட்டி உங்களுடைய கரத்தை மேலே உயர்த்தின்படி, இங்கே நின்று கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அந்தப் பழைய கட்டிக்கான ஒரு அறுவை சிகிச்சைக்காக ஆயத்தமாகிறீர்கள். ஆனால் தேவன் அதை வெளியே எடுத்து, உங்களைச் சுகப்படுத்துவார். நீங்கள் அதை விசுவா சிக்கிறீர்களா? போய், அதை விசுவாசியுங்கள். இங்கே தன்னுடைய தலையைச் சுற்றிலும் ஒரு வெள்ளை நிற கட்டைக் (band) கொண்டிருக்கும் இந்த அன்பான ஸ்திரீ, அவள் கறுப்பின சீமாட்டி: பித்தப்பை கோளாறு. தேவன் உன்னை சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? சக்கர நாற்காலியில் இருக்கும் உன்னைக் குறித்து என்ன? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவா சிக்கிறாயா? அங்கே உட்கார்ந்துகொண்டு நீ மரித்து விடுவாய். நீ பிழைக்கும்படிக்கு ஒரு வாய்ப்பு உனக்குண்டு. சமாரி யாவின் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த குஷ்ட ரோகிகளைப் போன்று. சகோதரியே, என்னால் உன்னைச் சுகப்படுத்த முடியாது. நான் குணமளிப்பவன் அல்ல. ஆனால் அந்த சமாரியர்கள், அவர்கள், நாம் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால், மரித்து விடுவோம். நாம் பட்டணத்திற்குள் போனாலும், மரிப்போம். எனவே நமக்கிருக்கிற ஒரே வாய்ப்பு என்னவென்றால், சத்துருவின் பாளயத்துக்குப் போவது தான். அவர்கள் நம்மைக் கொன்று போட்டால், நாம் எப்படியும் மரிக்கத்தான் போகிறோம். ஆனால் அவர்கள் நம்மைக் காப்பாற்றினால், நாம் பிழைப்போம் என்றார்கள். அவர்களுக்கு பத்து இலட்சக்கணக்கான வாய்ப்புகளில் ஒரு வாய்ப்பு தான் இருந்தது. உங்களுக்கு அவ்விதமான ஒரு வாய்ப்பு இல்லை. நீங்கள் இன்றிரவு உண்மையான அன்புள்ள ஒரு தேவனுடைய வீட்டிற்கு அழைக்கப்படுகிறீர்கள். இப்பொ ழுது உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். நடவுங்கள்..... நாம் எழுந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவா சிப்போம். எழுந்து நிற்போம். நீங்கள் அவரை விசுவாசிப் பீர்களானால், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் காலூன்றி எழுந்து நின்று, உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங் கள். ஆமென். பீட அழைப்பை எடுத்துக்கொள்ளுங்கள்….